திருமணமானதும், துணைவருடன் செல்லும் வழக்கமான ஹனிமூன் பயணத்துக்கு பதிலாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குழுவாக செல்லும் 'பட்டிமூன்' பயணத்தையே பிரிட்டன் இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.
18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, 2 ஆயிரம் தம்பதியர் மற்றும் காதலர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, பேமென்ட் செயலியான பின்கிட். இதில் பட்டிமூன் செல்ல விரும்புவதாக 47 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில் 52 சதவீதம் பேர், பெரிய குழுவாக ஹனிமூன் செல்லும்போதுதான், மிகவும் கொண்டாட்டமாக இருப்பதாக சொல்கின்றனர். மேலும், 64 சதவிகிதத்தினர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, நண்பர்களுடன் விடுமுறை நாட்களை செலவிட அதிகம் விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பட்டிமூன்: இது புதிய வகை ஹனிமூன்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!