Advertisement

ஆதிவாசிகளின் பாதுகாவலர்!

ஆதிவாசிகள், காட்டு விலங்குகளுக்கு பயப் படுவதில்லை. ஆனால், வன அதிகாரிகளை கண்டால், பயந்து ஓடுவர். எந்தவித ஆதரவும் இல்லாத ஆதிவாசிகளை, இரக்கமின்றி கொடுமைப்படுத்துவது பெரும்பாலான அதிகாரிகளின் பொழுது போக்கு.
ஆனால், கேரள மாநிலம், குட்டம்புழாவை சேர்ந்த சுதா என்ற பெண், பாரஸ்ட் ஆபீசராக, குஞ்சிப்பாறா காட்டுக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் பயம் விலகியது. ஏனெனில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பலரிடம் உதவி பெற்று, 14 ஆதிவாசி காலனிகளில், '497 டாய்லெட்'களை கட்டி தந்துள்ளார்.
வன அதிகாரிகளை கண்டால், ஓடி ஒளியும் ஆதிவாசிகள், சுதாவை கண்டால், சிரித்து, பேசி மகிழ்கின்றனர்.
- ஜோல்னாபையன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement