Advertisement

தினமும், 10 தோப்புக்கரணம்!

தோப்புக்கரணம் போடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். தொடர்ச்சியாக தினமும், 10 தோப்புக்கரணம் போட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும், என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் உடலை தாங்கி, இங்கும் அங்கும் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிப்பது, கால்கள். தினமும் தோப்புக்கரணம் செய்தால், கால்களின் வலிமை அதிகரிக்கும்.
தினமும் தோப்புக்கரணம் போடுவதால், உங்களின் இடுப்பு எலும்பு வலிமை பெறும். முதுகெலும்பு வலிமை பெற்று, முதுகுவலி வராமல் தடுக்கும்.
தினமும் தோப்புக்கரணம் போடுவதால், மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும். இது, மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் இது உதவுகிறது.
எனவே, பிள்ளையாரை வணங்கும் சாக்கிலாவது, தினமும் தோப்புக்கரணம் போடுங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement