Advertisement

இதப்படிங்க முதல்ல....

பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர், தனக்கு சினிமா வாய்ப்புத் தருவதாக சொல்லி, பாலியல் உறவுக்கு அழைத்து, பின், ஏமாற்றி விட்டதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின், தமிழ் சினிமாவிற்குள்ளும் சிலர் மீது புகார் கூறினார். இந்நிலையில், தற்போது, ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை, 'ரெட்டி டைரி' என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்த படம், அவருக்கு துரோகம் செய்த அத்தனை பிரபலங்களையும் தோலுரிக்கும் கதையில் உருவாகிறது. இந்த தகவல், சினிமா வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
— சினிமா பொன்னையா

அமலாபாலின் சைடு பிசினஸ்!
அதோ அந்த பறவை போல என்ற படத்தில் ஆக் ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார் அமலாபால். இந்நிலையில், சினிமாவில் நடித்துக்கொண்டே, உடலுக்கு ஆரோக்கியதைக் கொடுக்கும் ஆயுர்வேத ஊட்ட சத்து நிறுவனம் ஒன்றும் துவங்க உள்ளார். அதற்காக சிலரிடம், ஆலோசனை பெற்று வரும் அமலாபால், தன் நிறுவனத்தில் அதிகப்படியான பெண்களுக்கு வேலை வழங்கப் போவதாகவும் கூறுகிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
— எலீசா

பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை!
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பிரபலமான ஓவியாவிற்கு, அதன்பின், களவாணி - 2 மற்றும் காஞ்சனா - 3 உட்பட பல படங்கள் கிடைத்தன. அவரைத் தொடர்ந்து, இன்னொரு, 'பிக்பாஸ்' நடிகையான, ரைசா வில்சனுக்கு, பியார் பிரேமா காதல் படத்தை அடுத்து, துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கி வரும், வர்மா படத்தில் நடிக்க, 'சான்ஸ்' கிடைத்துள்ளது. இதன் காரணமாக, தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகர், நடிகையர் பலருக்கும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.காரையும், எள்ளையும் கருதி பயிரிடு!
— எலீசா


நிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்!
தனுஷ் நடித்து வரும், வடசென்னை படம், வடசென்னை பகுதியில் வாழ்ந்த சில ரவுடிகள் பற்றிய கதையில் தயாராகி வருகிறது. அதனால், அந்த ஏரியாவில் வாழ்ந்த ரவுடிகளைப் பற்றி ஆராய்ந்து, அவர்களின் உடல் மொழியை, தன் பாடி லாங்குவேஜில் கொண்டு வந்து நடிக்கிறார். அத்துடன், படம் முழுக்க சென்னை தமிழ் பேசி நடித்துள்ள அவர், அந்த ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அதிகமாக உச்சரிக்கும் சில புதிய வார்த்தைகளையும் சேகரித்து, இந்த படத்தின் வசனங்களில் சேர்த்துள்ளார்.
— சி.பொ.,


'காமிக்ஸ்' வடிவத்தில் சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவின் தற்போதைய பிரபல நடிகர்களான விஜய், அஜீத்திற்கு கிடைக்காத பெருமை, சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவர் நடித்த படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்திற்கு பின், சிவகார்த்திகேயனுக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகமாக உருவாகினர். அதனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை, 'காமிக்ஸ்' வடிவில், புத்தகமாக வெளியிடுகின்றனர்.
— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
* ஒரு நாள் கால்ஷீட்டுக்கு, 5 லட்சம் ரூபாய் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்தவர், புரோட்டா காமெடியன். ஆனால், சமீபகாலமாக அவருக்கு அதிர்ச்சி கொடுக்க, சில காமெடியன்கள் மார்க்கெட்டுக்கு வந்து விட்டனர். இதனால், புரோட்டாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. அதன் காரணமாக, தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, தற்போது, நாள் சம்பளம் பேசுவதை தவிர்த்து, மொத்த கூலி பேசி வருகிறார்.
''கடைக்கு போன சூரியை இன்னும் காணோம். எங்காவது வாயைப் பார்த்துட்டு நிப்பான். தலையில ரெண்டு போடு போட்டு, இழுத்துட்டு வாப்பா!'' என்றார், தயாரிப்பாளர்!

* அம்மாவுக்கு கோவில் கட்டிய காஞ்சனா நடிகருக்கு, எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் ஆசை உள்ளது. அதனால், உச்ச நடிகர் கட்சி ஆரம்பித்தால், அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள நினைக்கிறார். அதன் காரணமாக, உச்ச நடிகரை சந்தித்து, 'நீங்கள் கட்சி ஆரம்பிக்கும்போது நான்தான் உங்கள் கட்சியின் பிரசார பீரங்கியாக செயல்படுவேன்...' என்று இப்போதே நச்சரித்து வருகிறார்.
''டேய் லாரன்சு... சரளாம்மா, கருவாட்டு குழம்பு வச்சுருக்காங்களாம். சாப்பிட கூப்பிட்டாங்க... சீக்கிரம் வாடா!'' என்றார், உச்ச நடிகர்!


சினி துளிகள்!
* வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு, ஜெயில் என்று பெயர் வைத்துள்ளனர்.
* ஜோக்கர் படத்தில் நடித்த, ரம்யா பாண்டியன், அதையடுத்து சமுத்திரகனிக்கு ஜோடியாக, ஆண்தேவதை படத்தில் நடித்துள்ளார்.

அவ்ளோதான்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement