Advertisement

குழந்தை வாகனம்!

இன்றைய போக்குவரத்து நெரிசலை பார்த்தால், காரையும், பைக்கையும் ஓரம் கட்டி விட்டு, நடந்தே போயிடலாம் என்று தோன்றும். அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துடாதீங்க... உங்களுக்காகவே வந்து விட்டது, சிட்டிகோ.
குழந்தைகள் பயன்படுத்தும், ஸ்கூட்டி போல், இருக்கும். மடக்கி, சுருட்டி, தோளிலோ, அக்குளிலோ வைத்து, சாலையை கடக்கலாம்.
இதன் மீது ஏறி, நடைபாதையிலேயே சவாரி செய்யலாம். மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் ஓடும். மெட்ரோ ரயில் நிலையம், மால்களில் செல்ல வசதியாக இருக்கும். முன், பின் பக்க விளக்குகள், சார்ஜர், ஜி.பி.எஸ்., ட்ராக்கர் என, பல அம்சங்கள் உண்டு.
குழந்தைப் பருவத்தில் நடைவண்டி பழகியிருந்தால் மட்டுமே, இதை ஓட்ட முடியும்!
ஹி... ஹி...

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement