ஆர்ட்வார்க் (Ardwark)
உயிரியல் பெயர்:ஓரிக்ட்டெரோபஸ் அஃபர் - -Orycteropus afer
நீளம்: 3 முதல் 7 அடி வரை
எடை: 80 கி.
வேகம்: மணிக்கு 40 கி.மீ.
வாழ்நாள்: 23 ஆண்டுகள்
இனப்பெருக்க காலம்: 7 மாதங்கள்
ஈனும் குட்டி: 1
ஆர்ட்வார்க், பன்றி இனத்தைச் சேர்ந்த பாலூட்டி உயிரினம். ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. உடல் பழுப்பு, சாம்பல் மஞ்சள் நிறங்களில் இருக்கும். தடித்த தோல் பகுதியும், அடர்த்தியான ரோமங்களும் உடையது. மூக்கு நீண்டிருக்கும். காதுகளும் நீண்டவை. ரோமங்கள் அற்ற, தடித்த, குட்டையான வால் உண்டு. இரவு வேளைகளில் இரை தேடும். ஊனுண்ணியான இதன் உணவு, கறையான், எறும்பு, பூச்சி போன்றவை. மோப்பம் பிடித்து இரையைத் தேடும். கறையான், எறும்புப் புற்றுகளுக்குள் தன் நீண்ட நாக்கை விட்டுத் துழாவிப் பிடித்து உண்ணும்.
பாலூட்டி இனங்களிலேயே அதிகமாக, ஒன்பது மோப்பக் குமிழ்கள் (Olfactory Bulbs - ஆல்ஃபேக்டரி பல்ப்ஸ்) உள்ள உயிரினம் இது. மிக வேகமாகத் தரையில் வளை தோண்டக்கூடியது. ஐந்து நிமிடத்திற்குள் தரையில் வளை தோண்டி அதற்குள்ளே ஒளிந்துகொள்ளும். சிங்கம், சிறுத்தை, கழுதைப் புலி போன்றவற்றால் இவை வேட்டையாடப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதியில் இவை அதிகம் வாழ்கின்றன.
- ப.கோபாலகிருஷ்ணன்
மோப்ப ராஜா!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!