மழை பெய்யும்போது, மண்ணிலிருந்து எழும் வாசனையை நாம் அறிந்திருப்போம். இது எப்படி நிகழ்கிறது? இடியுடன் கூடிய மழை பெய்த பிறகு சுத்தமான காற்றும், ஈரமான மண் வாசனையும் எழுவதற்குக் காரணமாகத் தாவரங்கள், பாக்டீரியா, இடி, மின்னல் ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது.
தாவரங்கள்
வறட்சியான காலங்களில் தாவரங்களின் ஈரப்பதம் மண்ணால் உறிஞ்சப்பட்டு, எண்ணெய்ப் பசை உருவாகியிருக்கும். மழை பெய்யும்போது, அந்த எண்ணெய்ப் பசை மண்ணுடன் கலந்து மணம் பரப்புகிறது.
பாக்டீரியா
மண்ணில், 'ஸ்ட்ரெப்டோமைசிஸ்' (Streptomyces) என்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த பாக்டீரியாவிலிருந்து வெளிப்படும் 'ஜியோஸ்மின்' (Geosmin) எனும் கரிமச் சேர்மம் (Organic compund - ஆர்கானிக் காம்பௌண்ட்) மழை பெய்யும்போது மண்ணுடன் கலந்து காற்றில் பரவி மணம் பரப்ப உதவுகிறது.
இடி, மின்னல்
மழையின்போது ஏற்படும் இடி மின்னல் காரணமாக, காற்றில் உள்ள 'டைஅடாமிக் ஆக்சிஜன்' (Diatomic Oxygen) மூலக்கூறுகள் சிதைந்து ஈர மண்ணுடன் சேர்ந்து மணத்தை ஏற்படுத்துகின்றன.
- அ.ஆனந்தி
மனம் மயக்கும் மண்வாசனை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!