Advertisement

தடா அருவி

மாசுபடாத நீரில் நாள் முழுவதும் ஆட்டம் போடவேண்டுமா? இயற்கையான சூழலில் தனிமையை செலவிட வேண்டுமா? நண்பர்களுடன் டிரெக்கிங் போக வேண்டுமா? இவற்றுக்கு பொருத்தமான இடம், உப்பலமடுகு அருவி என்று அழைக்கப்படும் தடா அருவி. சென்னையில் இருந்து ஆந்திரம் செல்லும் வழியில், சுமார் 92 கி.மி., தொலைவில், சித்தூர் மாவட்டம் வரதப்பாளையத்துக்கு அருகில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அழகிய அருவியில் குளிப்பது, ஆனந்த அனுபவமாக இருக்கும். பளிங்கு நீரும், பசுமையான வனப்பகுதியும், தடாவின் அடையாளம். அருவி உருவாகும் மலைப்பகுதிக்கு செல்வது சற்று கடினமான பயணமாக இருக்குமென்பதால், சாகச பிரியர்களுக்கு பிடிக்கும்.
சாலை வழியாக செல்வது எளிது. பேருந்தில் செல்வதாக இருந்தால், கோயம்பேட்டில் இருந்து காளஹஸ்தி போகும் பேருந்தில் சென்று, வரதபாளையத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஆட்டோ வசதி உண்டு. ரயில் செல்வதாக இருந்தால் சூலூர்பேட்டையில் சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும். இயற்கை சூழலில் ஒரு நாளை உற்சாகத்துடன் செலவிட தடாவுக்கு பயணிக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement