Advertisement

பத்திரமா பாதுகாக்கணும்!

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்களின் தொகுப்புதான் சுற்றுச்சூழல். தாவரங்கள், உயிரினங்களின் அடிப்படைத் தேவையான காற்று, நீர், நிலம் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால், அது நாம் வாழும் சூழலைப் பாதிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும், அதில் மாணவர்களின் பங்கு என்ன என்பது குறித்து காஞ்சிபுரம், காஞ்சி குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். அதிலிருந்து...

ர.நிர்மல்குமார், 9ஆம் வகுப்பு
சுற்றுச்சூழல் பத்தி ஸ்கூல்லயும், செய்தித்தாள்களிலேயும் படிச்சுத் தெரிஞ்சுக்கறோம். ஆனா, சுற்றுச்சூழலுக்கு என்ன பண்றோம்னு உண்மைா யோசிச்சா, எங்களோட பங்கு குறைவுதான். காரணம், வீட்டுல இதைப் பத்தின அக்கறை பெரிசா இல்லை. நான் எங்க வீட்ல மக்கும் குப்பை, மக்காத குப்பையைத் தனியாப் பிரிச்சுப் போடணும்னு சொல்லியிருக்கேன். தண்ணியை வீணாக்க மாட்டேன்.

வெ.கார்த்திகேயன், 8ஆம் வகுப்பு
எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கற இடத்துல சின்னதா தோட்டம் வெச்சிருக்கோம். நான் செடிகளுக்குத் தண்ணீர் ஊத்தறது, பராமரிக்கறதுன்னு தினமும் பண்ணுவேன். எங்க ஏரியால இருக்கற அண்ணன்களோட சேர்ந்து நிழல் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டிருக்கோம். நட்டதோட இல்லாம, எங்க தெருவுல இருக்கறவங்க உதவியோட மரக்கன்றுகளைச் சுத்தி கம்பி வளையம் அமைச்சுப் பராமரிக்கறோம்.

எ.ஆதித்யன், 10ஆம் வகுப்பு
கடைக்கு அனுப்பினா வீட்டிலேயிருந்து துணிப் பை கொடுத்து அனுப்புவாங்க. இதனால பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தறது குறையுது. ஒரு பிளாஸ்டிக் கவர் மட்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்னு படிச்சிருக்கேன். அதனால சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்படுத்தறதை முதல்ல குறைக்கணும்.

அ.ஸ்ரீ.அபிநயா, 8ஆம் வகுப்பு
குப்பைகளை எரிக்கறது ரொம்பத் தப்பு. அதனால உருவாகிற புகையால நாம சுவாசிக்கிற காற்று மாசுபடுது. அதோட தாவரங்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுது. வீட்ல எல்லோரும் இரண்டு, மூணு வண்டி வெச்சிருக்காங்க. இப்படி வாகனங்கள் அதிகப்படியா இருக்கறதாலயும் காற்று மாசுபடுது. எதிர்காலத்துல, சுவாசிக்கற காற்றை காசு கொடுத்து வாங்கற நிலை வந்துடும்போல இருக்கு. அதனால, காற்றை மாசுபடுத்தாம பாதுகாக்க வேண்டியதுதான் முதல் கடமைன்னு நினைக்கறேன்.

க.ரேஷ்மா, 9ஆம் வகுப்பு
எங்க ஸ்கூல்ல வனப்பகுதிக்குச் சுற்றுலா கூட்டிட்டுப் போவாங்க. அங்க போறப்ப இருக்கற பசுமையான இயற்கைச் சூழல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மரங்களை வளர்க்கறதால நமக்கு நிறைய ஆக்சிஜன் கிடைக்குது. மழை அதிகமாகவும் மரங்கள் உதவுது. நிறைய மரக்கன்றுகள் நடணும். அது மூலமா நாம சுற்றுச்சூழல்ல பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். மரங்கள்தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை பாதுகாத்துக்கணும்னா, நிறைய மரங்களை வளர்க்கணும்.

ம.அஜிதா, 10ஆம் வகுப்பு
குடிநீர், காற்றைப் பாதுகாக்கறது முக்கியமான விஷயம். ஏரி, குளங்களில் குப்பை, கழிவுப் பொருட்களைக் கொட்டக் கூடாது. இது தண்ணிய பாழாக்கறதோட, தண்ணியில இருக்கற உயிரினங்களையும் அழிக்குது. உலகத்துல நல்ல தண்ணீர் இருப்பு குறைஞ்சுக்கிட்டே வருது. பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பத்தின நாடகங்கள், போஸ்டர்கள் தயாரிச்சு மாணவர்களுக்கு இதோட முக்கியத்துவத்தை உணர்த்தணும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement