Advertisement

செப் ஸ்பெஷல்: ருசி கூட்டும், 'பனீர் டிக்கா'

சாப்பாட்டின் தொடக்கத்தில் பரிமாறப்படும் அப்பட்டைசர் வகை உணவு டிக்கா. சிக்கன் டிக்கா தான் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருந்தாலும், சைவப் பிரியர்களுக்கென, அதே சுவையுடன் பனீர் டிக்கா தயாரிக்கும் செய்முறையை அளிக்கிறார், 'செப் 'சதீஷ்.

தேவையான பொருட்கள்:
பனீர் : 200 கிராம்
வெங்காயம்: 100 கிராம்
சிவப்பு குடைமிளகாய்: 2
பச்சை குடைமிளகாய் : 2
மிளகாய் தூள்: 1 டீஸ்பூன்
கரம் மசாலா: 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் : 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது: 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் : 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு : 2 ஸ்பூன்
உப்பு - எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை :
* பனீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாய்கள் ஆகியவற்றை சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் பனீர், வெங்காயம், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள், இஞ்சி-பூண்டு விழுது, வெண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மசாலா கலவையை நான்கு மணிநேரம் ஊறவிடவும்.
* ஸ்க்யூவரில் பனீர், வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை ஒன்றுபின் ஒன்றாக கோர்க்கவும். பின், ஸ்க்யூவரை, 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு கிரில் செய்யவும் அல்லது அடுப்பிலேயே குறைவான வெப்பத்தில் நேரடியாக சுட்டு எடுக்கலாம். நன்றாக வெந்து தயாரானதும், பனீர் டிக்காவை பரிமாறவும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement