Advertisement

ஆரோக்கிய உணவு: பாசிப் பயறு ஸ்பிரவுட் சாலட்

ஆரோக்கிய உணவு என்றாலே ருசியாக இருக்காது என்ற நினைப்பு நமக்கு பொதுவாக இருக்கும். இதன் விளைவே, ஸ்ப்ரவுட் எனப்படும் முளைகட்டிய பயிர்கள் பற்றிய நமது தயக்கம். எளிதாக சீரணிக்கக்கூடிய தரமான புரதச்சத்து, விட்டமின்கள், நுண்சத்துக்கள் நிறைந்திருக்கும் முளைகட்டிய பயிர்களை, சாலட்கள் வடிவில் அளித்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பாசிப் பயறு : 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1 (நடுத்தர அளவு)
பொடியாக நறுக்கிய தக்காளி : 1 (நடுத்தர அளவு)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் : 1
மிளகாய் தூள் : ¼¼ டீஸ்பூன்
சாட் மசாலா : ½ ½டீஸ்பூன்
எலுமிச்சை சாறு : தேவையான அளவு
வேக வைத்த உருளைக்கிழங்கு : 1
கொத்தமல்லி தழை, எலுமிச்சை துண்டுகள் : சிறிதளவு (அலங்கரிக்க)
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
* முளைகட்டிய பாசிப் பயறை நீரில் அலசவும்.
* நன்கு வேகும் அளவுக்கு கொதிக்க அல்லது ஆவியில் வேக விடவும்.
* வெந்த பயறை வடித்தெடுக்கவும்.
* எலுமிச்சை ஜூஸ், உப்பு தவிர்த்து, எல்லா பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும்.
* அதன் மீது தேவையான அளவு உப்பை தூவி, சில சொட்டுகள் எலுமிச்சை சாறை தெளித்து விடவும். எலுமிச்சைத் துண்டுகள், கொத்தமல்லி இலைகளை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement