Advertisement

ஆஹா ஆப்ளிகேஷன்கள்!: சிறந்த இசைக்கு 'சான்' செயலி

பாடல்கள் மற்றும் இசையை தரவிறக்கம் செய்யாமலே, விரும்பும் போது கேட்கும் வசதியை இசை செயலிகள் அளிக்கின்றன. தற்போது முன்னணியில் இருக்கும் இசை செயலிகளில் குறிப்பிடத்தக்கது, சான். மொழிகள் வாரியாகவும், பாடகர்கள் மற்றும் நடிகர்கள் வாரியாகவும் பாடல்களை தொகுத்து கொடுத்திருப்பது இந்த செயலியின் முக்கிய சிறப்பு. ஆனால் இது இலவச செயலி அல்ல. டிரயல் நாட்களில் மட்டும் இலவசமாக பாடல்கள் கேட்கலாம். அதன் பின்னர் கட்டணம் வசூலிக்கப்படும்.

பார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப் !
பார்வையற்றோருக்கு உதவும் வகையில், 'சவுண்ட்ஸ்கேப்' என்ற புதிய செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. 3டி ஆடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இது ஆடியோ வடிவில் வழிகாட்டும். முதல் கட்டமாக ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். ஸ்டோரில் மட்டும் கிடைக்கும். ஆண்ட்ராய்டு பதிப்பு பற்றி தகவல் ஏதுமில்லை. இந்த செயலியை பயன்படுத்த, ஸ்டீரியோ ஹெட்செட்களை பயன்படுத்த வேண்டும். இந்த செயலி வழங்கும் ஆடியோ தகவல்கள், குறிப்பிட்ட இடம் இருக்கும் திசையை பார்வையற்றோருக்கு உணர்த்தும் வகையில், மிகவும் நேர்த்தியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement