Advertisement

ரவுத்திர வீணை!

தமிழக எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு,
வணக்கம்யா. வழிப்பறி கொள்ளையர்களால பாதிக்கப்பட்ட லாவண்யாவை நேர்ல சந்திச்சு ஆறுதல் சொன்ன நீங்க, எங்களுக்கும் நீதி கிடைக்க உதவுவீங்கங்கிற நம்பிக்கையில இதை எழுதுறேன்.
கடந்த பிப்ரவரி 10ம் தேதி சாயங்காலம் 6:45 மணிக்கு, வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்புல என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு எங்களுக்கு தகவல் வந்தது. அலறி அடிச்சுட்டு ஓடுனோம்.
என்ன நடந்ததுன்னு விசாரிச்சதுமே, அவ மரணத்துல எங்களுக்கு சந்தேகம் வந்திடுச்சு.
ஏன்னா, அவ தற்கொலை செஞ்சிக்கிட்டான்னு சொன்னவங்க, அரசு சுகாதார மையத்தை தவிர்த்துட்டு தனியார் மருத்துவமனைக்கு தான் அவளை முதல்ல கொண்டு போயிருக்காங்க! அங்கே ஏத்துக்கலைன்னு சொன்னதும் தான் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்காங்க.
அவ இறப்புக்கு காரணமானவங்க மேல வழக்குப் பதியணும்னு வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர்கிட்டே நாங்க முறையிடுறதுக்குள்ளே, அவளோட அங்க அடையாளங்களை கூட எங்ககிட்டே உறுதிப்படுத்திக்காம, அவசர அவசரமா உடற்கூறாய்வை முடிச்சுட்டாங்க! அவ தற்கொலைக்கு பயன்படுத்தினதா சொல்லப்படுற கயிறு, அவளுக்கு எட்டாத உயரத்துல இருந்ததுய்யா!
என் பொண்ணு சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கலை. ஆனா, இதுக்கு காரணமானவங்களுக்கு தண்டனை கொடுக்காம, இடம் மாறுதல் கொடுத்து அவங்களை காப்பாத்தி இருக்குது இந்த அரசு.
ஆசை ஆசையா நாங்க பெண்ணை பெத்து வளர்த்தது, இந்த ஆட்சி அதிகாரத்து கிட்டே பலி கொடுக்கவா; சொல்லுங்கய்யா... சொல்லுங்க!
- செவிலி மணிமாலாவின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்கும் தாய் கஸ்துாரி, பண்ருட்டி, கடலுார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement