Advertisement

யு.பி.எஸ்.சி.,யின் வனவியலாளர்கள் தேர்வு

மத்திய அரசின் அமைச்சகப் பணியிடங்கள் மற்றும் முக்கியமான பணியிடங்களை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பாக இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் எக்சாமினேஷன் 2018ஐ நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : 2018 ஆக., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள், 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக அனிமல் ஹஸ்பண்டரி, வெர்டினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, பொறியியல் படிப்பு போன்றவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை : இரண்டு கட்ட தேர்ச்சி முறை இருக்கும். முதலில் சிவில் சர்வீசஸ் தேர்வின், பிரிலிமினரி தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். இதன் பின்னர் இந்தியன் பாரஸ்ட் சர்வீசுக்கான, மெயின் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய்.
கடைசி நாள் : 2018 மார்ச் 6.
விபரங்களுக்கு : http://www.upsc.gov.in/sites/default/files/Notification_IFSP_2018_Engl.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement