Load Image
dinamalar telegram
Advertisement

பட்டுப் பராமரிப்பு

திருமணத்தன்று மணமகள் உடுத்தும் பட்டுப் புடவை நிச்சயம் மிகவும் காஸ்ட்லியானதாகத்தான் இருக்கும். மணப்பெண்ணுடன் கூடவே இருக்கும் அவரது தோழியோ அல்லது அத்தை மாமி போன்ற பெரியவர்களோ, மணமேடையில் மணமகள் அமரும் போது, பட்டுப்புடவை கசங்காமல் இழுத்து விடுவது, முகத்தில் வியர்வை படியாமல் துடைத்து விடுவது என்று பல உதவிகள் செய்வார்கள். அதே போல, தாலி கட்டும் போது மணமக்கள் மீது மஞ்சள் அரிசையை தூவியதும், அவை புதுப்புடவையிலேயே ஒட்டியிருக்காமல் உடனடியாக தட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் புடவையில் மஞ்சள் கறை படிந்து விடும்.

திருமணச் சடங்குகளின் போது குங்குமமோ, மஞ்சளோ புபடவையில் புடவையில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல கைக்குட்டை, வெட் டிஸ்யூ பேப்பரை கொடுத்து வைத்திருங்கள். ஏதேனும் கறை பட்டால் துடைத்து விட உபயோகமாக இருக்கும்.

ஒவ்வொரு சடங்குகளுக்கும் வெவ்வேறு பட்டுப் புடவைகளை உடுத்த வேண்டி வரலாம். புடவையை மாற்றும் போது காட்டும அக்கறையை, ஏற்கனவே உடுத்தி அவிழ்த்த பட்டுப் புடவையின் மீதும் செலுத்த வேண்டும். கட்டில் மீதோ, சோஃபா மீதோ அவிழ்த்த புடவையை போட்டு வைக்காமல், அதில் வியர்வை, பன்னீர், சந்தனம் போன்ற ஏதேனும் ஈரம் பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஈரமாக இருந்தால் அந்த இடத்தில் காற்றுப்படும்படி மடித்து ேஹங்கரில் தொங்க விட வேண்டும். ஈரம் உலர்ந்த பின் கசங்காமல் மடித்து வைக்கலாம். சிலர் வேறு சடங்குக்கு செல்லும் அவசரத்தில் ஈரத்துடனேயே புடவையை மடித்து பெட்டிக்குள் வைத்து விடுவார்கள். அப்படி செய்தால் புடவை வீணாகி விடும்.

பட்டுப்புடவை கட்டிக் கொண்டு உணவு சாப்பிடும் போது, மணப்பெண் மிகவும் கவனுடத்துடன் இருக்க வேண்டும். வெள்ளை நிற சால்வை போன்ற துண்டை, புடவையின் மேல் போட்டுக் கொண்டு சாப்பிடலாம். மடியிலும் நாப்கின் ஒன்றை விரித்து வைத்துக்கொள்ளலாம். வெள்ளைத் துண்டை விரும்பாதவர்கள், டிசைன் செய்யப்பட்ட ஃபேஷன் துணியை மேலே போட்டுக் கொள்ளலாம். புடவையில் கறைகள் படிந்து விட்டால், திருமணம் முடிந்ததும், ஸ்டைன் ரிமூவரைக் கொண்டு உடனடியாக துடைத்து விட வேண்டும்

சிலருக்கு நிறைய வியர்க்கும். குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை படிந்து பிளவுஸில் கரைகட்டியது போல் இருக்கும். ஸ்வெட் பேட் என்று கடையில் விற்கிறது. அதை வாங்கி வைத்துக் கொண்டு பிளவுஸ் அணிந்தால் வியர்வை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். உபயோகித்த பிறகு ஸ்வெட் பேட்டை தூக்கி எறிந்து விடலாம். ஸ்வெட் பேட் கிடைக்காதவர்கள், பிளவுஸுடன் உள்ளே பருத்தி துணியால் ஸ்வெட் பேட் போல வைத்துக் கொள்ளலாம்.

பர்ஃப்யூம்களை நேரடியாக பட்டுச்சேலையின் மீது படுமாறு ஸ்ப்ரே செய்வதை தவிர்க்கவும். முதல் முறையாக பட்டுப் புடவையை டிரைக்ளீன் செய்ய கொடுக்கும் போது நல்ல கடையா என்று விசாரித்து கொடுக்கவும். ஸ்டார்ச் போடாமல் பட்டுப் புடவையின் இயற்கையான மென்மை மாறாமல் டிரைக்ளீன் செய்யச் சொல்லுங்கள்

- அகிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement