மீண்டும் பிறக்காமலிருக்கக் கடுமையாக உழைக்க வேண்டும்
தவத்தால் அல்ல, தீர்த்த யாத்திரையால் அல்ல, சாஸ்திரக் கல்வியால் அல்ல, ஜபத்தால் அல்ல, அடியார்க்குச் சேவை செய்வதன் மூலமே ஸம்ஸாரப் பெருங்கடலைக் கடக்க முடியும். (சமஸ்கிருத ஸ்லோகம்)
அன்பு இதயத்தைத் தூய்மையாக்கும்
தவம் செய்தல், தீர்த்த யாத்திரை, தியானம் ஆகியவற்றைவிட, ஸத்ஸங்கம் அதிகப் பயன்தரும். ஸத்ஸங்கம் என்பதன் உண்மைப் பொருள் என்ன? ஸத்ஸங்கம் என்பது நல்லோர் குழாத்தில் இருப்பது, அவர்தம் போதனைகளைக் கேட்பது எனப் பலரும் நினைக்கிறார்கள்.
ஸத்ஸங்கம் என்பதன் பொருள் இது அல்ல. ஸத் என்றால் முக்காலமும் மாறாத உண்மை. த்ரிகாலபாத்யம் ஸத்யம் (உண்மை என்பது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூனறிலும் மாறாதது)
அதை ஸரித்திரத்தால் அழிக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த ஸத்தியம்தான் தெய்வம். இறைவனைக் குறித்த பிரக்ஞையுடன் வாழ்வதே ஸத்ஸங்கம். தத் என்பதும் இறைவனைக் குறிப்பிடும் ஸத் என்பதையே குறிக்கிறது. ஆக, ஸத்ஸங்கம் என்பது மாற்றமற்ற, குணங்களற்ற, உருவமற்ற, அமரத்துவம் கொண்ட, எல்லையற்ற, அகண்டமான தனித்துவமிக்க, ஏகப் பொருளான தெய்வீகத்தில் வாழ்வதுதான்.
- சத்யசாயி பாபா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!