Advertisement

'சிக்ஸ் பேக்' நந்திதா

'தன்னழகால் காளையர்களை கவிழ்க்க வாடிவாசல் வருகிறாள் துள்ளிக்கிட்டு... காந்தக் கண்களால் களமிறங்கி நடக்கிறாள் ஜல்லிக்கட்டு, மங்கை இவள் தேகம் இனிக்கும் கரும்புக்கட்டு' என கவிதை பாட வைப்பவர் நடிகை நந்திதா. தைத்திருநாளில் நுரை பொங்கும் அழகால் சர்க்கரை பொங்கலிட்டு... ரசிகர்களுக்காக மனம் திறந்த முல்லை மொட்டு... நந்திதா பேசுகிறார்.

* 'உள்குத்து' பட அனுபவம்
'கடலரசி' என்ற கேரக்டரில், நாகர்கோவில் துணி கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். ஷூட்டிங்கில் நிஜமாவே நான் கடையில் வேலை செய்யும் பெண் என நினைத்து மக்கள் என்னிடம் சேலைகள் குறித்து விளக்கம் கேட்டனர். 'அட்டக்கத்தி' படத்துக்கு பின் இதில், தினேஷ் உடன் நடித்திருக்கேன். சுறா சங்கருக்கு தாதா கேரக்டர்.

* சினிமாவை புரிதல்?
என்னை நான் நன்றாக புரிந்து கொண்டேன். சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்ற முயற்சி செய்து வருகிறேன். அதற்காக நிறைய உழைக்கிறேன்.

* 'அட்டக்கத்தி' பூர்ணிமா, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' குமுதா?
ரெண்டு கேரக்டரிலும் நான் வித்யாசமாக நடித்து ரசிகர்கள் பாராட்டை பெற்று ஜெயித்துள்ளேன். வெளியில் நான் எங்கே போனாலும் குமுதான்னு தான் கூப்பிடுறாங்க. சில ரசிகர்கள் என் பக்கத்தில் வந்து 'குமுதா ஹேப்பி'ன்னு சொல்லிட்டு ஓடுவாங்க.

* உங்களை பற்றி வரும் கிசுகிசு?
ஷூட்டிங் முடிந்ததும் அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிடுவேன். வேலை முடிந்த பின் ஒரு இடத்தில் இருக்க எனக்கு பிடிக்காது. அதனால கிசு கிசு எல்லா வருவது இல்லை.

* உங்களிடம் காதல் சொன்ன ஹீரோக்கள்?
பல ஹீரோக்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. தினேஷ் மாதிரி ஒரு சிலர் தான் பேச்சுலரா இருக்காங்க... புதுசா வரும் ஹீரோக்களும் என்னை சீனியர் நடிகையா பார்க்குறாங்க. அதனால காதல் சொன்ன அனுபவம் இன்னும் கிடைக்கலை.

* சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் நடித்தும் பெரிய லெவலுக்கு போகலயே?
எனக்கும் அந்த ஆசை இருக்கு, கடவுள் என்ன கொடுக்கணுமோ அதை கொடுப்பார். அதிர்ஷ்டம் இருந்தால் நானும் பெரிய இடத்துக்கு வருவேன். அவங்க எல்லாம் பெரிய லெவலுக்கு போனதில் சந்தோஷம்.

* போலீஸ் கேரக்டரில் நடித்தது....
'வணங்காமுடி' படத்துக்கு நான் 'சிக்ஸ் பேக்' வைத்திருக்கேன். தினமும் உடற்பயிற்சி செய்து 'ஜிம் கேர்ள்' ரேஞ்சுக்கு வந்திருக்கேன். போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமா முழுசா மாறியிருக்கேன்.

* அடுத்த படங்கள்?
இப்போதான் உள்குத்து ரிலீசாகி வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு. அடுத்து இயக்குனர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, ஒரு படத்தில் பாக்சரா நடிக்கிறேன். தெலுங்கில் கூட ஒரு படம் பண்றேன்.

* யார் இயக்கத்தில் நடிக்க ஆசை?
கவுதம் மேனன் வேலை பார்க்கும் ஸ்டைல் பயங்கரமா இருக்கும்னு சொல்வாங்க, அவர் இயக்கத்தில் நடிக்கணும்.

* அறம், அருவி மாதிரி ஹீரோயின் கதைகள்?
மொத்த படத்தையும் நான் தாங்கி கொண்டு போவேன் என எனக்க நம்பிக்கை வரலை. ஆனால், நிறைய கதைகள் வருது.

- கவிதா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement