Advertisement

அறிவியல் 2017

முழு சூரிய கிரகணம்
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
99 ஆண்டுகளுக்குப்பின் ஆக., 21ல் முழு சூரிய கிரகணம் தோன்றியது. இது அமெரிக்காவின் பல பகுதிகளில் முழுமையாக தெரிந்தது. ஆயிரக்கணக்கானோர் தொலைநோக்கி மூலம் பார்த்தனர். இந்தியாவில் தெரியவில்லை. சாதாரண சூரிய கிரகணம், சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைக்கும். ஆனால் இந்த கிரகணத்தில் சூரியனை, சந்திரன் முழுவதுமாக மறைத்தது.

குட்பாய் 'கேசினி'
சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து, 2வது பெரிய கோள் சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. இதனை ஆய்வு செய்ய நாசா விண்வெளி மையம், 1997 அக்., 15ல், 'காசினி' விண்கலத்தை ஏவியது. 7 ஆண்டுகள் பயணம் செய்து 2004 ஜூலை 1ல் சனியின் சுற்றுப்பாதையை அடைந்தது. இதற்கு உதவியாக 'ஹுய்ஜென்ஸ்' என்ற ரோபோ விண்கலம் 2005 ஜனவரியில் சனியின் பெரிய நிலவான டைட்டனில் தரையிறங்கியது. அதுவரை டைட்டன் என்பது புதன் கிரகத்தை விட பெரியது அடர்த்தியான வளிமண்டலம் கொண்டது என்ற கருத்து இருந்தது. ஆனால் டைட்டன் அவை எல்லாவற்றையும் விடக் குறைவானது என்பதை கேசினி விண்கலம் உலகுக்கு காட்டியது. 20 ஆண்டுகளுக்குப்பின், செப்., 15ல் நாசா விஞ்ஞானிகள் இதன் இயக்கத்தை நிறுத்தினர்.

நிலவில் நீண்ட 'குகை'
நாம் வாழும் பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலவு. இங்கு 50 கி.மீ., நீளமுள்ள குகை இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் அக்., 20ல் கண்டறிந்தனர். நிலவிற்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து ரஷ்யா, இந்தியா, சீனா, நாடுகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஜப்பானும் இணைந்துள்ளது. ஜப்பான் அனுப்பிய 'செலீன்' விண்கலம் நிலவில் குகை இருப்பதை கண்டுபிடித்தது. இக்குகை சுமார் 31 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மின்சார கப்பல்
முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் சரக்கு கப்பல் சேவையை சீனா நவ., 16ல் அறிமுகப்படுத்தியது. குவாங்சூ நகரில் உள்ள பியர்ல் ஆற்றில் சேவை தொடங்கியது. மின்சார நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்காக இக்கப்பல் பயன்படுத்தப்படுகிறது. 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 கி.மீ., துாரம் வரை செல்லும். இதற்காக இக்கப்பலில் 'லித்தியம் ஐயன் பேட்டரி' பயன்படுத்தப்படுகிறது. 2,000 மெட்ரிக் டன் (20 லட்சம் கிலோ) எடையை தாங்கும் சக்தி பெற்றது.

நிலவு... செவ்வாய்... சூரியன்
உலகளவில் விண்வெளி ஆராய்ச்சியில் 'இஸ்ரோ' சிறப்பு வாய்ந்தது. ஏற்கனவே நிலவுக்கு சந்திராயன், செவ்வாய்க்கு மங்கள்யான் விண்கலத்தை ஏவி சாதனை படைத்தது. அடுத்து சூரியனை ஆய்வு செய்ய 2019ல் 'ஆதித்யா எல்1' விண்கலத்தை அனுப்ப உள்ளதாக அறிவித்தது. இதன் எடை 1500 கிலோ. பெங்களூருவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோ பிசிக்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி., - எக்ஸ்.எல்., ராக்கெட் மூலம் விண்கலம் அனுப்பப்படும்.

ஏழு புதிய கோள்கள்
நாசாவின் 'ஸ்பிட்சர்' விண்வெளி தொலைநோக்கி மூலம் நடந்த ஆய்வில், சூரியனை போன்ற மெகா அளவு கொண்ட நட்சத்திரத்தை சுற்றும் ஏழு கோள்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் மூன்று கோள்கள், உயிர்வாழ தகுதியானவையாக இருக்கக்கூடும் என தெரிவித்தனர். பிப். ௨௩ல் இதனை 'நாசா' அறிவித்தது.
பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் இந்த புதிய சூரியக்குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள்களுக்கு, 'டிராப்பிஸ்ட் 1' என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர். நாசா விண்கலத்தில் மணிக்கு சுமார் 28,000 கி.மீ., வேகத்தில் பயணித்தால் டிராப்பிஸ்டை சென்றடைவதற்கு 15 லட்சம் வருடங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement