Advertisement

உலகம்

ஜனவரி
ஜன. 1: துருக்கி இஸ்தான்புலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் பலி.
சீனா டூ லண்டன் ஜன. 1: சீனாவின் யுவி-லண்டன் சரக்கு ரயில் தொடக்கம். கஜகஸ்தான், ரஷ்யா, பெலராஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக 12 ஆயிரம் கி.மீ., கடந்து, 18 நாட்களில் லண்டனை அடைந்தது. மறு மார்க்கத்தில் ஏப்., 10ல் புறப்பட்டு, ஏப்., 29ல் யுவி நகரை அடைந்தது.
ஜன. 2: பிரேசிலில் அமேசான் மாநிலத்தில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் பலி.
ஜன. 5: சீனாவில் 2,760 கி.மீ., தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை.
ஜன. 11: அமெரிக்க அதிபர் ஒபாமா 'பிரியாவிடை' உரை.
வல்லரசு அரியாசனம் ஜன. 20: அமெரிக்காவின் 44வது அதிபராக டொனால்டு டிரம்ப், 71, பதவியேற்றார். வாஷிங்டனில் உள்ள 'கேபிடல் பில்டிங்கில்' நடந்த விழாவில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஜன. 27: ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதராக அமெரிக்க - இந்தியரான நிக்கி ஹாலே நியமனம்.
ஜன. 29: 'மிஸ் யுனிவர்ஸ் - 2016' அழகியாக பிரான்சின் ஐரிஷ் மிட்டனேர் தேர்வு.

பிப்ரவரி
பிப். 1: 53வது சார்க் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது.
பிப். 6 : உலகின் நீளமான விமான சேவை கத்தார் - நியூசிலாந்து இடையே (14,535 கி.மீ.,) துவக்கம். பிப். 19: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரர், கிம் ஜாங் நாம் மலேசியாவில் படுகொலை.

மார்ச்
மார்ச் 10: தென்கொரிய அதிபர் பார்க் ஹை நீதிமன்றத்தால் பதவிநீக்கம்.
மார்ச் 15: பாகிஸ்தான் 19 ஆண்டு களுக்குப்பின் 'சென்செஸ்' நடத்தியது.
மார்ச் 22: லண்டன் பார்லிமென்ட் கட்டடத்துக்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் பலி.

ஏப்ரல்
ஏப். 3: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலி.
* ஈக்வடார் அதிபராக லெனின் மொரீனோ தேர்வு.
* இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு, பாக்., நீதிமன்றம் துாக்குதண்டனை. இந்தியா கண்டனம்.
ஏப். 13: 'வெடிகுண்டுகளின் தாய்' என அழைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டை, ஆப்கன் ஐ.எஸ்., முகாம் மீது அமெரிக்கா வீசியது. 94 பயங்கரவாதிகள் பலி.
ஏப். 20: லண்டனில் மகாத்மா காந்தியின் ஸ்டாம்ப்கள் 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம்.
ஆகாயத்தில் அசத்தல் ஏப். 24: நாசா விஞ்ஞானி பெஜ்ஜி விட்சன் விண்வெளியில் 534 நாட்கள் 2 மணி 48 நிமிடங்கள் தங்கி பணியாற்றினார். இதன் மூலம் சக வீரர் ஜெப் வில்லியம்சின் சாதனையை முறியடித்து, நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய அமெரிக்க வீரரானார்.
ஏப். 25: முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமான தாங்கி கப்பல் சீனாவில் அறிமுகம்.
ஏப். 26: துருக்கியில் பயங்கரவாத மதகுரு பதுல்லா குலெனுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், 9,000 காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம்.
ஏப். 27: பாதுகாப்பு நடவடிக்கை களுக்காக முகத்தை முழுவதுமாக மறைக்கும் 'பர்தா' அணிய ஜெர்மனி தடை.
ஏப். 30: 1941ல் தொடங்கப்பட்ட பி.பி.சி., தமிழோசை ஒலிபரப்பு நிறுத்தம்.

மே
மே 7: பிரான்சின் புதிய அதிபராக இம்மானுவேல் மக்ரோன் தேர்வு.
மே 10: தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜேயின் தேர்வு
பதற வைத்த 'வைரஸ்' மே 16: 'வான்னாக்ரை' என அழைக்கப்படும் ரேன்சம்வேர் வைரஸ், மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது. உலகளவில் 150 நாடுகளில் 2.3 லட்சம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.
மே 21: அமெரிக்க அதிபர் டிரம்ப், முதல் வெளிநாடாக சவுதிக்கு பயணம்.
மே 23 : இங்கிலாந்தின் மான்செஸ்டர் அரினா உள்ளரங்கில், ஐ.எஸ்., தாக்குதலில் 22 பேர் பலி.
மே 24: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு தைவான் நீதிமன்றம் அனுமதி.
மே 30: முழுவதும் பெண்கள் பணிபுரியும் 'டிவி' சேனல் ஆப்கனில் தொடக்கம்.

ஜூன்
ஜூன் 2: பிலிப்பைன்சில் சூதாட்ட விடுதிக்கு மர்ம நபர் தீ வைத்ததில் 36 பேர் பலி.
ஜூன் 3 : லண்டனில் ஐ.எஸ். தாக்குதலில் 7 பேர் பலி.
ஜூன் 4 : ஐ.எஸ்.,க்கு கத்தார் ஆதரவு. இதனால் அந்நாட்டுடன் துாதரக உறவை சவுதி, எகிப்து, யு.ஏ.இ, பஹ்ரின் முறித்தன.
ஜூன் 7 : நேபாள பிரதமர் பிரசண்டா பதவி விலகல். புதிய பிரதமராக ஷெர் பகதுார் தியூபா பொறுப்பேற்பு.
'தில்'லான தெரசா ஜூன் 9 : பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் 650 இடங்களில் 318ல் வென்று கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடித்தது. பிரதமராக மீண்டும் தெரசா மே பொறுப்பேற்பு.
ஜூன் 13: அயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வர்தாகர்,39, தேர்வு.
பரிதாபம் ஜூன் 14: பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடி கிரன்பெல் அடுக்குமாடி கட்டடத்தில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் எரிந்து சரிந்தது. தீயில் சிக்கி 30 பேர் பலி.
ஜூன் 15: சோமாலியாவில் உணவகத்தின் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலில் 31 பேர் பலி.
ஜூன் 21: சவுதி இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்பு.
ஜூன் 25: பாகிஸ்தானில் கவிழ்ந்த பெட்ரோல் லாரியில், ஏற்பட்ட தீ விபத்தில் 153 பேர் பலி.
ஜூன் 30: ஜெர்மனி ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கியது.

ஜூலை
ஜூலை 6: 'ஜி 20' மாநாடு ஜெர்மனியில் நடந்தது.
ஜூலை 22: உலகின் பெரிய விமானம் தாங்கி கப்பல் 'ஜெரால்டு ஆர்.போர்டு' அமெரிக்க கப்பல் படையில் சேர்ப்பு.
ஜூலை 27: உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெஜாஸ் முந்தினார்.
பதவிக்கு 'வேட்டு' ஜூலை 28: 'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செய்தது. பல நாடுகளின் பிரபலங்கள் சட்டவிரோதமாக பதுக்கிய சொத்துகளின் விபரமே 'பனாமா பேப்பர்ஸ்'.

ஆகஸ்ட்
ஆக. 1: பாக். புதிய பிரதமராக சாகித் கான் அப்பாசி பொறுப்பேற்பு.
* உலகின் நீளமான நடைமேடை (1620 அடி), சுவிட்சர்லாந்தில் திறப்பு.
ஆக. 5: ஈரான் அதிபராக ஹாசன் ருஹாணி மீண்டும் பதவியேற்பு.
ஆக. 9: தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கத்தில் 100 பேர் பலி.
ஆக. 22: சிரியாவில் ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 ஐ.எஸ்.,கள் பலி.
ஆக. 26: ஊழல் வழக்கில் சாம்சங் துணைத்தலைவர் லீ ஜே யாங்கிற்கு 5 ஆண்டு சிறை.
ஆக. 28: பாலிதீன் பயன்படுத்தினால் 4 ஆண்டு சிறை, 25 லட்சம் அபராதம் என கென்யாவில் சட்டம் அமல்.

செப்டம்பர்
செப். 5: அமெரிக்காவில் ஹட்சன் நகரில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரம் நீரில் மூழ்கியது.
செப். 10: அமெரிக்காவின் புளோரி டாவில் 'இர்மா' புயல், மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் கரையை கடந்தது.
செப். 13: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலிமா பதவியேற்பு.
செப். 14: மலேசிய பள்ளி தீ விபத்தில் 22 மாணவர்கள் பலி.
செப். 18: லாகூர் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் வெற்றி.
செப். 20: மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 248 பேர் பலி.
செப். 22: ரஷ்யா 'ஆர்க்டிகா' என்ற உலகின் பெரிய பனிக்கட்டி உடைக்கும் கப்பலை அறிமுகப்படுத்தியது.
செப். 26: சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி. 2018 ஜூனில் இருந்து அமலுக்கு வரும்.
மெர்கல் 'மெர்சல்' செப். 26: ஜெர்மனி பிரதமர் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக ஏஞ்சலா மெர்கல் வெற்றி. இவர் 2005ல் இருந்து இப்பதவியில் நீடிக்கிறார்.

அக்டோபர்
சோக கீதம் அக். 2: அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது, அருகில் இருந்த ஓட்டலின் 32வது மாடியில் இருந்து ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 58 பேர் பலி.
அக். 3: இயற்பியல் நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ரெய்னர் வெய்ஸ், பேரி பாரிஸ், கிப் தார்னே தேர்வு.
அக். 4: அமலாக்கத்துறை தாக்கல் செய்த பண மோசடி வழக்கில், லண்டனில் மல்லையா கைது. உடனடியாக ஜாமின் பெற்றார்.
அக். 6: அமைதிக்கான நோபல் பரிசுக்கு 'ஐகேன்' எனப்படும் அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம் என்ற அமைப்பு தேர்வு.
அக். 8: முற்றிலும் இணையதளத்தில் இயங்கும் உலகின் முதல் 'போலீஸ் ஸ்டேஷன்' துபாயில் துவக்கம்.
அக். 9: பொருளாதார நோபல் பரிசுக்கு, ரிச்சர்டு எச்.தாலர் தேர்வு.
அக். 22: அமெரிக்க புயல் பாதிப்பு நிவாரண நிதி நிகழ்ச்சியில், அந்நாட்டின் 5 முன்னாள் அதிபர்கள் பங்கேற்பு.
அக். 23: ஜப்பான் பிரதமர் தேர்தலில் ஜின்சே அபே மீண்டும் வெற்றி.
அக். 25: சீன அதிபராக ஜின் பின் மீண்டும் தேர்வு.
அக். 26: நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் பொறுப்பேற்பு.
கேடலோனியா தனிநாடா அக். 28: ஸ்பெயினில் தன்னாட்சி பெற்ற கேடலோனியா மாகாண மக்கள், தனிநாடு கோரி வந்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர். இதனால், ஸ்பெயின் அரசு, கேடலோனியாவின் தன்னாட்சியை ரத்து செய்து நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

நவம்பர்
நவ. 1: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.எஸ்., ஒருவன், மக்கள் மீது டிரக் ஓட்டியதில் 8 பேர் பலி.
நவ. 4: பிலிப்பைன்சில் நடந்த 'மிஸ் எர்த் 2017' போட்டியில், அந்நாட்டின் கரென் இபாஸ்கோ பட்டம் வென்றார்.
நவ. 6: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலி.
கின்னஸ் சாதனை நவ. 9: துபாயில் 56 போலீசார் இணைந்து, 3.02 லட்சம் கிலோ எடையுள்ள 'எமிரேட்ஸ் ஏர் பஸ் ஏ380' விமானத்தை கயிறால் 100 மீட்டர் துாரம் இழுத்து கின்னஸ் சாதனை. இதற்கு முன் ஹாங்காங்கில், 100 பேர் 2.18 லட்சம் கிலோ எடை விமானத்தை இழுத்ததே சாதனை.
நவ. 11: வங்கதேச தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்கா ராஜினாமா.
எல்லையில் பூகம்பம் நவ. 13: ஈரான் - ஈராக் எல்லையையொட்டிய மலைப்பகுதியான ஹலாப்ஜா அருகே 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த
பூகம்பம் ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் இருந்த குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகின. ஈரானை சேர்ந்த 300 பேர் உள்பட 437 பேர் பலி. 7,600 பேர் காயமடைந்தனர்.
நவ. 21: 37 ஆண்டுகள் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே ராஜினாமா. புதிய அதிபராக மங்காக்வா நியமனம்.

டிசம்பர்
டிச. 6: பெண்கள் மீதான வன் கொடுமைகளுக்கு எதிராக போராடிய 'தி சைலன்ஸ் பிரேக்கர்ஸ்', 'டைம்' இதழின் 2017ம் ஆண்டுக்கான அங்கீகாரம்.
டிச. 9: ஹம்பன்தோட்டா துறை முகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை, சீனாவிடம் வழங்கியது.
டிச. 10: சவுதியில் சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி.
டிச. 15: பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லே திருமணம், 2018 மே 19ல் நடைபெறும் என கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு.
டிச. 30: இந்தியா எதிர்ப்பை தொடர்ந்து, பாக்., பயங்கரவாதி ஹபிஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற துாதரை பாலஸ்தீனம் திரும்ப பெற்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement