Advertisement

தமிழகம்

ஜனவரி
ஜன. 4: தி.மு.க., பொதுக்குழுவில் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு. முன்னதாக பொருளாளராக இருந்தார்.
ஜன. 6: கோவை--மயிலாடுதுறை ரயிலில் சோலார் பேனல் பெட்டி, சோதனை முறையில் இயக்கம்.
ஜன. 9: மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் தமிழகம் இணைந்தது.
ஜன., 12: விஜயவாடாவில் முதல்வர் பன்னீர்செல்வம் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு. சென்னை குடிநீர் தேவைக்கு நீர் திறக்க கோரிக்கை.
ஜன. 23: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.
ஜன. 24: ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் நடந்த போராட்டம் முடிவு.
மெரினா புரட்சி ஜன. 24: தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு, உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வெற்றி.
கொடி கவுரவம் ஜன. 26: சுதந்திர தினத்தில் முதல்வர், குடியரசு தினத்தில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் மும்பை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால், பன்னீர்செல்வம் கொடியேற்றினார். குடியரசு விழாவில் முதல்வர் கொடியேற்றியது இது முதல்முறை.
கடல் 'எண்ணெய்' ஜன. 28: எண்ணுார் துறைமுக கடல் பகுதியில், 'எம்.டி.மாப்பில் - எம்.டி.டான் காஞ்சிபுரம்' ஆகிய இரு கப்பல்கள் மோதின. அதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த, எண்ணெய் கடலில் கசிந்தது. இது பழவேற்காடு, எண்ணுார், திருவொற்றியூர் கடல் பகுதிகளில் பரவியது.
ஜன. 30: 'நீட்' நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல்.

பிப்ரவரி
பிப். 5: தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா. சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு.
பிப். 7: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம். தர்மயுத்தம் தொடங்குவதாக அறிவிப்பு.
கனவு 'பணால்' பிப். 14: மறைந்த முதல்வர் ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. முதல்வராகலாம் என்ற கனவில் இருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு.
பிப். 15: நெடுவாசல் 'ஹைட்ரோ கார்பன்' திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை எதிர்த்து போராட்டம் துவக்கம்.
3வது முதல்வர் பிப். 16: தமிழகத்தின் புதிய முதல்வராக பழனிச்சாமி பதவியேற்பு. இந்த ஆட்சியில் ஜெயலலிதா, பன்னீர்செல்வம் வரிசையில் மூன்றாவது முதல்வரானார்.
அவையில் அமளி பிப். 18: சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 ஓட்டுகள் பெற்று பழனிச்சாமி அரசு வெற்றி. அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.
பிப்., 26: திருச்செந்துார் அருகே மணப்பாடு கடலில், சுற்றுலா சென்ற படகு விபத்துக்குள்ளனாதில் 10 பேர் பலி.
பிப். 27: தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மார்ச்
மார்ச் 6: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை.
மார்ச் 8: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி, பன்னீர் அணியினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்.
மார்ச் 14: டில்லி ஜே.என்.யு., பல்கலை., மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை.
மார்ச் 18: சென்னையில் கார் தீப்பிடித்ததில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர், அவரது மனைவி பலி.
மார்ச் 21: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் கைது.
மார்ச் 22: 'இரட்டை இலை' சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க., கட்சி பெயரையும் பயன்படுத்த தடை.
மார்ச் 23: தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 39,565 கோடி கேட்ட நிலையில், ரூ.1748.28 கோடியை மத்திய அரசு அறிவித்தது.

ஏப்ரல்
ஏப். 1: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் துவக்கம்.
ஏப். 2: தமிழகத்தின் மூன்றாம் பாலின எஸ்.ஐ.,யாக பிரித்திகா யாஷினி பொறுப்பேற்பு.
ஏப். 3: தேச துரோக வழக்கில், புழல் சிறையில் வைகோ அடைப்பு. மே 24ல் ஜாமினில் வெளிவந்தார்.
ஏப். 5: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்பு.
ஏப். 7: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை.
ஏப். 8: மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பொறுப்பேற்பு.
ஏப். 9: வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா புகாரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து.
ஏப். 11: விருதுநகரில் பல் மருத்துவக்கல்லுாரி தொடங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
ஏப். 16: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை.
ஏப். 17: ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பல், சென்னை மாநகருக்கு அர்ப்பணிப்பு.
ஏப். 20: பிரதமர் மோடி உத்தரவின் படி, காரில் சிவப்பு விளக்கை முதல்வர் பழனிச்சாமி அகற்றம்.
'தெர்மாகோல்' ராஜு ஏப். 21: வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க, அதன் மேல் தெர்மாகோல் அட்டைகளால் மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லுார் ராஜு தொடங்கினார். தோல்வியடைந்த இத்திட்டம், சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது.
ஏப். 26: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது. திகார் சிறையில் அடைப்பு.
ஏப். 28: யானைகளை பிச்சை எடுக்க வைப்பது குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஏப். 29: நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது.

மே
மே 3: 2016க்கான தேசிய விருதில் சிறந்த படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து உள்பட தமிழுக்கு 6 விருதுகள் கிடைத்தன.
மே 5: மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 2 மேம்பாலங்களை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைப்பு.
மே 12: பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங் முறை' ரத்து.
சுரங்கப்பாதை ரயில் மே 14: சென்னையில் முதல் மெட்ரோ ரயில் சுரங்க சேவை (7.4 கி.மீ.,), திருமங்கலம் - நேரு பூங்கா இடையே துவக்கம். தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்தில், 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
மே 15: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
மே 21: மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதாக, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது. செப். 20ல் விடுதலை.
மே 22: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு, பிளஸ் 2க்கு 200க்கு பதிலாக 100 மதிப்பெண் என பல மாற்றங்கள் அறிவிப்பு.
மே 24: தமிழக முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்தார்.
மே 27: சென்னை பல்கலை துணைவேந்தராக துரைசாமி, மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லத்துரை நியமனம்.
மே 31: தி.நகர் 'சென்னை சில்க்ஸ்' கடையில் தீ விபத்து. கட்டடம் முழுவதும் எரிந்தது.

ஜூன்
ஜூன் 3: கருணாநிதியின் சட்டசபை பணி வைர விழாவில், ராகுல், நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்பு.
ஜூன் 7: பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீத அளவுக்கு குறைப்பு.
ஜூன் 9: புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை திறப்பு.
* திருமண நிகழ்ச்சிக்காக மலேசியா சென்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜூன் 13: மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் தொடர்பான 'கூவத்துார் குதிரை பேர' வீடியோ வெளியானது.
ஜூன் 14: பண பேரம் தொடர்பாக, பேச அனுமதி மறுத்ததை கண்டித்து, சாலை மறியல் செய்த தி.மு.க., காங்., முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்கள் 94 பேர் கைதாகி விடுதலை.
நீதிபதிக்கு 'சிறை' ஜூன் 21: உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன், கோவையில் மேற்கு வங்க போலீசாரால் கைது. கோல்கட்டா சிறையில் அடைப்பு. டிச.௨௦ல் விடுதலை.
ஜூன் 30: எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு துவக்க விழா மதுரையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

ஜூலை
ஜூலை 1: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், சென்னை வருகை. முதல்வர் பழனிச்சாமி, பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.
ஜூலை 11: தமிழகத்தில் முதன் முதலாக கிருஷ்ணகிரி இளைஞருக்கு ஜிகா வைரஸ் கண்டுபிடிப்பு.
ஜூலை 13: 2009ல் இருந்து 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு.
ஜூலை 14: தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் மோதியதில் 10 பேர் பலி.
ஜூலை 16: சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது. செப்., 5ல் விடுதலை.
ஜூலை 17: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக டி.ஜி.பி. ரூபா புகார்.
ஜூலை 19: தமிழக எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம், ரூ. 55 ஆயிரத்தில் இருந்து, ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்வு.
ஜூலை 25: பள்ளி, கல்லுாரிகளில் 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
'சலாம்' கலாம் ஜூலை 27: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தை, ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு 50 ஆண்டுகளுக்குப்பின் சாலை போக்குவரத்தை துவக்கினார்.

ஆகஸ்ட்
ஆக. 9: கொசுக்களை ஒழிக்க 'ஆயில் உருண்டை பந்துகள்' திட்டம் வேலுார் மாநகராட்சியில் துவக்கம்.
ஆக. 12: நடிகை கவுதமி, சென்சார் போர்டு உறுப்பினராக நியமனம்.
ஆக. 14: காஷ்மீரில் பயங்கர வாதிகளுடன் நடந்த சண்டையில், தமிழக வீரர் இளையராஜா மரணம்.
ஆக. 15: தமிழக அரசின் 2017 அப்துல் கலாம் விருது, பேராசிரியர் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது.
ஆக. 19: மறைந்த முதல்வர் ஜெ., யின் போயஸ் கார்டன் வீடு, நினைவில்லமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
இணைந்த 'இலை' ஆக. 21: அ..தி.மு.க., இரு அணிகள் இணைந்தன. கட்சியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமியும் நியமனம். துணை முதல்வராக பன்னீர் பொறுப்பேற்பு. பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரானார்.
ஆக. 23: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ஆக. 24: ராஜிவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, தமிழக அரசு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
ஆக. 25: ஆற்று மணலுக்கு மாற்றான 'எம்.சேண்ட்' விழிப்புணர்வு புத்தகத்தை முதல்வர் பழனிச்சாமி வெளியீடு.
மிரட்டிய 'புளூ வேல்' ஆக. 30: உலகம் முழுவதும் 'புளூ வேல்' என்ற ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை அடிமைப்படுத்தி, தற்கொலைக்கு துாண்டியது. இதில் சிக்கி பலர் பலியாகினர். தமிழகத்தில் மதுரை மாணவர் விக்னேஷ் இவ்விளையாட்டால் தற்கொலை. இதன் பின் இவ்விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

செப்டம்பர்
செப். 1 : கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை.
'நீட்' சோகம் செப். 1: 'நீட்' அடிப்படையில் 2017க்கான எம்.பி.பி.எஸ்., அட்மிஷன் நடந்தது. பிளஸ் 2வில் 1176 மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் வெற்றி பெறாததால் அரியலுார் மாணவி அனிதா தற்கொலை. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
செப். 6: தமிழகத்தில் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிப்பு.
செப். 9: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
செப். 11: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்.
* தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
செப். 15: மதுரை- சிங்கப்பூர் நேரடி விமான சேவை துவக்கம்.
செப். 18: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம்.
செப். 19: ஜெனீவாவில் நடந்த மனித உரிமைக் கவுன்சில் 36-வது கூட்டத்தில், 'தமிழர் உலகம்' அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு.
செப்., 21: நடிகர் கமல் - டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு.
செப். 23: மாநகராட்சியாக ஓசூர் மாற்றப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
செப். 25: ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்.

அக்டோபர்
அக். 6: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா 5 நாள் பரோலில் சென்னை வந்தார்.
* புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்பு.
அக். 11: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமல்.
அக். 20: நாகையில் போக்குவரத்து கழக ஓய்வறை இடிந்து விழுந்ததில், ஊழியர்கள் 9 பேர் பலி.
அக். 23: நெல்லையில், கந்து வட்டி புகார் கொடுக்க வந்த இசக்கிமுத்து, மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழந்தனர்.
அக். 24: சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின் காணாமல் போன நாய், 100 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு.
* உயிருடன் இருப்பவர்களுக்கு, பிளக்ஸ் பேனர்கள் வைக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை.
அக். 27: ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க, தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி நிதி.

நவம்பர்
ஸ்ரீ ரங்கத்துக்கு விருது நவ. 1: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, யுனெஸ்கோ சார்பில் 'ஆசிய பசிபிக் மெரிட்' விருது அறிவிப்பு. பழமை மாறாமல் புதுப்பித்து திருப்பணி செய்ததன் அடிப்படையில் விருதுக்கு தேர்வு. இச்சிறப்பை பெற்ற முதல் தமிழக கோயில் இதுவே.
மோடி 'விசிட்' நவ. 6: சென்னையில் தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின், உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நவ. 8: யுனெஸ்கோ பாரம்பரிய இசை நகரம் பட்டியலில் சென்னை தேர்வு.
நவ. 9: சசிகலா குடும்பத்தினரின் 187 இடங்களில் வருமான வரி சோதனை.
நவ. 14: ஆந்திராவின் நந்தி விருதுக்கு, நடிகர்கள் ரஜினி, கமல் தேர்வு.
நவ. 15: கோவையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை.
நவ. 18: ஜெ.,யின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.
நவ. 23: இரட்டை இலை சின்னம், முதல்வர் பழனிச்சாமி அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
நவ. 24 : வேலுாரில் ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்த 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை.
நவ. 27: ஊதிய உயர்வு வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்.
நவ. 29: புதிய மணல் குவாரிகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நவ. 30: கன்னியாகுமரி மாவட்டத்தில் 'ஒக்கி' புயலால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மீனவர்கள் பலர் மாயமானதால் மக்கள் குமுறி அழுதனர்.

டிசம்பர்
டிச. 3: மாற்றுத் திறனாளி திட்டங் களுக்காக மதுரை கலெக்டர் வீரராகவ ராவுக்கு, ஜனாதிபதி விருது.
டிச. 6: சென்னையில் தாயை கொன்ற தஷ்வந்த், மும்பையில் கைது. இவன் சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கில் ஜாமினில் வந்தவன்.
டிச. 7: ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் வேட்பு மனு தள்ளுபடி.
'ஏரறிஞர்' விருது டிச. 10: வேளாண் வளர்ச்சிக்காக பாடுபட்ட விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 'ஏரறிஞர்' விருதை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். வேளாண் பல்கலை, மீன் வள பல்கலை, கால்நடை மற்றும் அறிவியல் பல்கலை இணைந்து வழங்கின.
டிச. 12: கலப்பு திருமணம் செய்த கவுசல்யா கணவர் சங்கர், கொலை வழக்கில், குற்றவாளிகளில் 6 பேருக்கு மரண தண்டனை. 5 பேருக்கு ஆயுள்.
டிச. 13: கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற எஸ்.ஐ., பெரியபாண்டியன் சுட்டுக்கொலை. 4 காவலர்கள் படுகாயம்.
டிச. 20: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.
டிச. 21: 'காந்தள் நாட்கள்' கவிதைக்காக மறைந்த இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது.
தனி ஒருவன் டிச. 24: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன், 40,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. 1980க்குப் பின் இடைத்தேர்தலில் வென்ற முதல் சுயேச்சையானார்.
டிச. 30: நினைவு இல்லம் அமைப்பது தொடர்பாக ஜெ.,யின் போயஸ் கார்டன் இல்லத்தில் சென்னை கலெக்டர் ஆய்வு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement