ஜிமிக்கி கம்மல்
ஜிமிக்கி கம்மல் - இன்று பிரபலமான மலையாளப் பாடல். வலை தளங்களில் வைரலாகப் பரவிவரும் பாட்டு இது. லாரல் - கார்டியினுடைய நாட்டியத்தை ஓடவிட்டு, இப்பாட்டை ஒலிக்க வைத்தால் அவர்கள் இப்பாட்டிற்கு என்று ஆடியது போல் இருக்கிறது. அநேகமாக உலக மொழிகள் எல்லாவற்றிலும் இப்பாடலின் தாக்கம் பற்றிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய மொழிகளும் சைனீஸும் இதற்கு விதி விலக்கல்ல.
மலையாள மொழி தெரிந்த ஒருவரிடம் இப்பாட்டைப் பற்றி கேட்டோம். அம்மாவுடைய ஜிமிக்கி கம்மலை அடகு வைத்து மது குடிக்க ஒருவர் கிளம்புவதுதான் பாட்டின் கருத்துச் சுருக்கம். இந்த அர்த்தத்தை எல்லாம் யார் பார்த்தார்கள்? காதுக்கு இனிமையாய், தாளத்திற்கு சுகமாய் அமைந்த பாட்டு என்று மோகன்லாலிலிருந்து நம்ம ஊர் தளபதி விஜய் வரை எல்லோரும் தாளம் போட்டு ரசிக்கிற பாட்டு என்றார் அவர்.
மோகன்லால் நடித்த திரைப்பாடல் இது. இந்தப் பாடல் முதலில் ஒலிக்கப்பட்ட போது அதற்குப் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. எப்போது இப்பாடல் முக்கியத்துவம் பெற்றது?
கல்லூரி ஆசிரியர்கள் இருவர் ஓணம் திருவிழாவில் இப்பாடலுக்கு அபிநயம் பிடித்த ஆடியோ வீடியோ கேஸட் வைரலாக வலைதளங்களில் வெளியான போதுதான் பிரபலமானது, ஷரில், ஆனி ஜோசப் இருவரும் கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எம்.காம்., முடித்துவிட்டு கோழிக்கோடு கல்லூரி ஒன்றில் ஆசிரியைகளாக வேலை செய்கிறார்கள். ஷரில் அவர்கள் பினான்ஷியல் அகௌண்டிங் பாடம் நடத்துகிறார். ஆனி ஜோசப் அவர்கள் இன்சூரன்ஸ் பாடம் போதிக்கிறார்.
இதிலே பெரிய வேடிக்கை என்னவென்றால் டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் ஷிரில்லை தமிழ்ப் படத்தில் நடிக்க முடியுமா? என்று கேட்டு இருக்கிறார்.
என்டு அச்சான்டு ஜோதிச்சுட்டு பின்னே பறையாம்... என்றாராம் ஷிரில்! இந்த மாத அட்டைப்பட நாயகி.
- என். ரமேஷ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!