Advertisement

மின்னல் வேகத்தில் நடத்தி...

என் வயது, 74. எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இரு ஆசிரியர்கள் மூலம் முக்கியமான சில பாடங்களை கற்றேன். ஒருவர் தமிழ் ஆசிரியர்; சிறந்த அறிவாளி. 'கட கட' என, மின்னல் வேகத்தில் பாடம் நடத்தி விடுவார்.
மாணவர்களை உரக்க படிக்க வைக்கும் போது, இரு மாணவர்களுக்கே வாய்ப்பளிப்பார்; மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்; அவ்ளோ தான், அவர் வேலை முடிந்தது.
மற்றவர், வரலாறு, புவியியல் ஆசிரியர். வகுப்புக்கு, 'மேப்' எடுத்து வரவே மாட்டார்; எல்லாம், 'ஓரல்' தான். அதனால், நன்றாக படிப்பவர்களுக்கு தான் நாடுகளும், தலைநகர்களும், மலைகளும், மேப்பில் குறிக்க தெரியும்; பலருக்கு தெரியாது. கடமை முடிந்ததும் போய் விடுவார். முடிவு... இறுதி தேர்வில் பலர் பெயில்; என் போன்றோர், 'ஜஸ்ட் பாஸ்!'
இவ்விருவரின் செயல்பாடுகள் என் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் நான், மேனிலை ஆசிரியரானேன்; வகுப்பில், எல்லாரும் உரக்க படிக்க வாய்ப்பளித்தேன்.
கேள்விகளுக்கு, கடைசி மாணவனும் பதிலளிக்க செய்தேன். தவறு ஏற்பட்டால், சரி படுத்தினேன். வரலாறு, புவியியல் வகுப்புகளுக்கு, தவறாமல், 'மேப்' எடுத்துச் சென்று, எல்லா இடங்களையும் குறித்து காட்ட வாய்ப்பளித்தேன்.
தேர்வுகளில், 'மேப்'பில் எல்லா மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றதை உறுதி செய்தேன். 10, 12ம் வகுப்புகளில், நான் போதித்த பாடங்களில், எல்லா ஆண்டிலும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
நான், பணியாற்றிய பள்ளியில், பொதுதேர்வில், எந்த பாடத்தில் எல்லா மாணவர்களும் தேர்வு பெறுகின்றனரோ, அந்த ஆசிரியருக்கு, பரிசளிப்பது பள்ளி முதல்வரின் வழக்கம்!
எல்லா முறையும், பரிசு பெற்றுள்ளேன்; இன்றும் அப்பள்ளியில் பரிசளிப்பு தொடர்கிறது!
- ஜேசுபிரசாத், குன்னுார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement