இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பணப்பயிர்களில் ஏலக்காய் வாசனை பொருள் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தில் அதிகம் விளைகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரள ஏலத்தோட்ட உரிமையாளர்கள், பணிபுரிவோர் அதிகம் பேர் தமிழர்கள் தான். இந்திய அரசின் 'வாசனைத் திரவிய வாரியம்' ஏலத்தோட்ட பணியாளர்களின் குடும்பங்களின் குழந்தைகளுக்கு பல உதவிகள், சலுகைகள், உதவித்தொகை கொடுத்து வருகிறது. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவ கல்லுாரிகளில் படிக்கவும் உதவித்தொகை உண்டு. ஏலத்தோட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகள், 'கிராண்ட் இன் எய்ட்' எனப்படும் திட்டத்தில் உதவி பெற விண்ணப்பிக்கலாம். இந்த உதவிகளுக்கான முழு விபரம், விண்ணப்பம் ஆகியவற்றை www.indianspices.com எனும் வலை தளத்தில் எடுத்து பூர்த்தி செய்து, வாசனை திரவிய போர்டின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்தில் கொடுக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு தோறும் அக்டோபர் 30 கடைசி நாள். முழு விபரம் பெற, 'வாசனை திரவிய வாரியம், இந்திய அரசு, சுகந்த பவன், கொச்சின், கேரளா' என்ற முகவரிக்கு ஆங்கிலத்தில் எழுதி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
- எம்.ஞானசேகர்
விவசாய தொழில் ஆலோசகர்
சென்னை.
93807 55629
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!