Advertisement

சளிக்கு மாமருந்தாகும் வில்வம்!

இலை, வேர், பழம், விதை என அனைத்தின் மூலம், மனிதர்களுக்கு மருத்துவ பயன்களை தரக்கூடிய வில்வ மரம். எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இமயமலை அடிவாரத்திலிருந்து குமரி வரை, நாடெங்கிலும் காணப்படும் இந்த மரம், இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. இதன் பயன்கள் ஏராளம். தொடர்ந்து தாக்கும் அதிக சுரத்தை குணப்படுத்த, 200 வில்வ இலைகளை சாறு இடுத்து அதை மூன்றில் ஒரு பகுதியாக சுண்டக் காய்ச்சி, அது வற்றியபின் அதனுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டால் போதும்.
வெண்ணையுடன் சேர்த்து வில்வப்பழத்தை சிறிது சர்க்கரையுடன் தொடர்ந்து சாப்பிட புத்தி கூர்மையும், தேஜசும் கிடைக்கும்; மலச்சிக்கலைக் குணப்படுத்தும் வில்வ இலைகள், உடல் நரம்புகளை வலுப்படுத்துகிறது. தோலுக்கு மினுமினுப்பை அளிக்கிறது. மனநோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு வில்வ இலைகளை மென்று உண்பது நல்லது.
வில்வத்தின் இலை, கூட்டிலை, மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது. இதை மகாவில்வம் என்பர். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது. இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப்பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்ற பெயரும் உண்டு.
நுரையீரல் தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது. சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், ஆஸ்துமா பாதிப்புக்கு வில்வம் மிகச் சிறந்த மருந்தாகும். தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும். வில்வம், இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.
மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்கிறது; சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றில் தோன்றும் பாதிப்புகளான அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது. வில்வ இலைகளை மசிய அரைத்து, வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து பருக வேண்டும். தலையிலே ஏற்படும் வழுக்கையை அகற்றி, மீண்டும் முடி வளரச்செய்யும் ஆற்றல்
வில்வப் பழத்தின் தோலுக்கு உள்ளது.
குறைந்த தீயில் வில்வப் பழத்தின் தோலைச் சுட்டு, அதை வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், பலன் தெரியும். நூறு ஆண்டு ஆன வில்வ மரத்தின் இலைகள் கொடிய தோல்நோயையும் குணப்படுத்தும். தினமும் வெறும் வயிற்றில் கைப்பிடியளவு வில்வ இலைகளை 48 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் கொடிய நோயும் குணமாகும் என மருத்துவ நூலகள் கூறுகின்றன.
வில்வ வேரை 15 மி.கி., எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி., தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, ஆண்மையை அதிகரிக்கும். ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், வாததோசம் போகும் .
பாதி கனிந்த வில்வபழத்தை சதையை நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊறவைத்து, குளிக்கும் போது உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சரும நோய்
மற்றும் உடம்பு எரிதல் குணமாகும். வில்வ இல்லை காற்றை சுத்தமாக்கும். வில்வ பழத்தை தொடர்ந்து உபயோகிக்க சர்க்கரை வியாதி குணமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement