dinamalar telegram
Advertisement

வாசகர் கடிதம்

Share

மெருகு கூடிக் கொண்டே போகிறது, எங்கள் நாயகிக்கு. அத்தனை செய்திகளும், முத்தாய் பயனுள்ளதாய் இருக்கிறது. எவ்வளவு தான் நாம் சொன்னாலும், அதிகாலை வாக்கிங் என்பதின் பலனை பெண்கள் கவனத்தில் கொள்வதில்லை. திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்போம்.
முனைவர் கி.நிர்மலா, மந்தாரக்குப்பம், நெய்வேலி

போதை சாக்லேட் மிக அதிகமாக விற்பனை செய்து, இப்போது சோதனையில் பிடிபட்ட வடசென்னை பகுதிவாசி நான். இதன் வீரியத்தால் உயிரிழந்த மாணவனையும், இன்னும் இந்த போதைக்காக அலையும் பல மாணவர்களையும் நாங்கள் அறிவோம். அரசின் கடும் சட்டம் மட்டுமே இதை தடுக்க செய்யும்.
எல்.பால குருசாமி. தண்டையார்பேட்டை, சென்னை.

நம் மீதான நம்பிக்கையை உணர்த்தவும், உணரவும் வாய்ப்பும் சூழ்நிலையும் வாய்த்தவர்கள் தான் வெற்றி பெறுகின்றனர் என்பதற்கான பாடமாக, தையல் நாயகி பாரதியின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு இருக்கின்றன. பொருளாதார பலம் மட்டுமே, பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் என்பதும் நிரூபணமாகிறது.
கு.புவனேஷ்வரி, பெரியபாளையம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement