நாம் அருந்தும் பாலில் இல்லாத புளிப்புச் சுவை தயிரில் எப்படி உருவாகிறது?
l காய்ச்சி ஆற வைத்த பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்த பின்னர் பாலில் நொதித்தல் வினை (Fermentation - ஃபெர்மென்டேஷன்) தொடங்குகிறது.
l பாலில் 'லாக்டோஸ்' (Lactose) என்ற சர்க்கரைப் பொருள் உள்ளது. நொதித்தல் வினை நடக்கும்போது 'லாக்டோபாசில்லஸ்' (Lactobacillus) என்ற பாக்டீரியா (Bacteria) பாலில் இருக்கும் 'லாக்டோஸ்' சர்க்கரையை உண்டு, லாக்டிக் அமிலத்தை (Lactic Acid - லாக்டிக் ஆசிட்) வெளியேற்றுகிறது.
l இந்த அமிலத்தின் தாக்கத்தால், பாலில் உள்ள 'கேசின்' (Casein) புரதம் சிதைகிறது. உருண்டை வடிவில் உள்ள இந்தப் புரதம், நார் போன்று மாறுகிறது.
l அந்த நார்கள் ஒன்றோடு ஒன்று பிணைவதால், பால் 'உறைகிறது'. இப்படி உறைந்த பால்தான் 'தயிர்'. லாக்டிம் அமிலம் தயிர் புளிக்கக் காரணம். தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதன் புளிப்புச் சுவையும் கூடிக்கொண்டே போகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!