வீட்டிலேயே செய்யலாம் மலாய் கிரீமி சிக்கன்

ஜப்பானில் பிரபலமான சுவையான, மலாய் கிரீமி சிக்கனை வீட்டிலேயே செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு தலா 4 டே.ஸ்பூன், உப்பு, குருமிளகுத்தூள் தலா 1/2 டீஸ்பூன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

இதில் சிக்கனையும் சேர்த்து கலக்கி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 20 முந்திரிப்பருப்பை மிக்சி ஜாரில் பவுடராக அரைக்கவும்.

கடாயில் வெண்ணெயை விட்டு, உருகியவுடன் நறுக்கிய 2 ப.மிளகாய் மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து கிளறவும். பால் 200 மி.லி., 3 டீஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு, முந்திரி பவுடர் சேர்க்கவும்.


இரண்டு நிமிடங்கள் கழித்து பொரித்தெடுத்த சிக்கனையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

ஒருசில நிமிடங்களில் நன்றாக வற்றி கெட்டியான கிரேவி பதத்தில் வரும்போது, கொத்தமல்லி இலைகளைத் தூவவேண்டும். இப்போது சுவையான மலாய் கிரீமி சிக்கன் ரெடி.Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...