உலகின் டாப் 10 அழகிய நூலகங்கள் பற்றி அறிவோமா ?

ஆஸ்திரியாவில் உள்ள அட்மோண்ட் அபே நூலகம் உலகளவில் அழகான நூலகங்களுள் ஒன்றாகும். 1776ல் கட்டப்பட்ட இந்த நூலகம்.

உலகின் மிகப்பெரிய நூலகமாக அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் விளங்குகிறது.

பிரிட்டனில் உள்ள போட்லியன் நூலகம்-1602ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நூலகத்தில், 14ம் நூற்றாண்டை சேர்ந்த பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

டிரினிட்டி கல்லூரி நூலகம்- இந்த நூலகத்தில் அழகிய மரவேலைப்பாடுகள், புகழ்பெற்ற தத்துவ மேதைகளின் பளிங்கு உருவங்கள் பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

மெக்ஸிகோவில் உள்ள பைபிலியோடெகா வாஸ்கான்சிலோஸ் நூலகம் தொங்கும் தோட்டம் போல புத்தக அலமாரிகள் மிதந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் இருக்கும்.

ஸ்ட்ராஹோவ் மோனஸ்ட்ரி நூலகம், 16ம் மற்றும் 18ம் நூற்றாண்டுக்கு மத்தியில் பதிக்கப்பட்ட பல புத்தகங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.

இத்தாலியில் உள்ள பைபிலியோடெகா ஸ்டாடேல் நூலகத்தில் ஏராளமான பழமையும், புதுமையும் கலந்த கட்டடக்கலை அமைப்பில் அமைந்துள்ளது.

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பொது நூலகம் எளிமை, நேர்த்தி மற்றும் செயல்பாட்டின் கலவையாக இந்த நூலகம் விளங்குகிறது.

தமா ஆர்ட் பல்கலை நூலகம், குறைந்த இருக்கை, கண்ணாடி சுவர்கள் மற்றும் வளைவான கட்டட அமைப்புடன் அமைந்துள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...