அல்சரை குணமாக்கும் சம்மர் ஸ்பெஷல் நுங்கு !

கோடைக் காலத்தில் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடியது நுங்கு. தாகத்தை தணிப்பது மட்டுமல்ல; பல நோய்களை தடுக்கவும் திறன் உடையது நுங்கு.

இரண்டு நுங்கின் சதையை தனியே எடுத்து, மிக்சியில் அரைத்து, ஒரு டம்ளர் தேங்காய் பாலில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் குடிக்க, வாய், நாக்குப் புண்கள் குணமாகி விடும்.

அல்சரின் அறிகுறிகள் நாளடைவில் குறையவும் வாய்ப்பு உள்ளது.

மார்பக கேன்சர் உட்பட கேன்சர் செல்களை தடுக்கும் ஆந்தோசயாமின், பயோடின் எனப்படும் விட்டமின் பி7 நுங்கில் அதிகம் உள்ளது.

நகங்கள் உடையாமல் வளரவும், தலைமுடி, தோல் ஆரோக்கியமாக இருக்கவும், முகப்பரு ஏற்படுவதைத் தடுக்கவும் நுங்கு உதவுகிறது.

வியர்க்குரு அதிகமாக இருந்தால் நுங்கை அரைத்து தடவி, 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவினால் ஒருசில நாட்களில் தீர்வு கிடைக்கும்.

கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் தாராளமாக நுங்கு சாப்பிடலாம்; ரத்தசோகை குறையும்.

கோடையில் உஷ்ணத்தை குறைத்து, உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும். எனவே, அம்மை நோய்கள் தவிர்க்கப்படுகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...