டாட்டூ போடப் போறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க...

டாட்டூ குத்திக்கொள்ள செல்லுவதற்கு முந்தைய இரவில் காபி அல்லது ஆல்கஹால் அருந்தாமல் இருப்பது நல்லது.

டாட்டூ போட்டுக்கொள்ள முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே நிறைய தண்ணீர் குடிக்க தொடங்குங்கள். நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

டாட்டூ போட்டுக் கொள்ளும் முன், இது அவசியம் தானா என்று நன்கு யோசித்து முடிவெடுங்கள். முதன்முறை டாட்டூ போடும் முன் சிறியளவு டாட்டூக்களை தேர்வு செய்வது நல்லது.

பல வண்ணங்களில் டாட்டூ போடுவதை தவிர்க்கலாம். ஏனெனில், கலர் டாட்டூக்களை அழிக்கும்போது கடும் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

டாட்டூ போடும் ஊசியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு பயன்படுத்த போகும் ஊசி புதிதா அல்லது வேறு யாருக்கேனும் பயன்படுத்தியதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

டாட்டூ போட உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே டாட்டூ போட்டுக் கொள்ளுங்கள். டாட்டூ வரைபவர் கையுறை அணிந்திருக்கிறாரா என்றும் கவனியுங்கள்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...