கிரிஸ்பி சீஸ் கார்ன் பால்ஸ்...விட்டிலேயே செய்யலாம் வாங்க

முதலில் 2 வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதனுடன் 1 கப் வேகவைத்த கார்ன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மேலும், இதில் பொடியாக நறுக்கிய 1 வெங்காயம் மற்றும் சிறிது கொத்தமல்லி, 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ், 2 டே.ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு, 3/4 கப் துருவிய பன்னீர், 1 டீஸ்பூன் சீஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கையில் சிறிது எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பிறகு மைதா மாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஒவ்வொரு உருண்டையாக மைதா பேஸ்ட்டில் போட்டு, பின்னர் பிரட் தூளில் கோட்டிங் செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கார்ன் சீஸ் பால்ஸ் ரெடி.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...