சிறுநீரகங்களைப் பாதிக்கும் கெட்ட பழக்கங்கள்...

போதுமான தண்ணீர் அருந்தாத நிலையில் உடலில் உள்ள நச்சுக்களும் கழிவுகளும் சிறுநீரகங்களில் தேங்கி, சிறுநீரகக் கல் ஏற்படும் பிரச்னை உள்ளது. இதை தவிர்க்க தாகம் எடுக்கும்போது போதுமான தண்ணீர் அருந்துங்கள்.

உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் நஞ்சு மது. இதனால், அதிகம் பாதிப்புக்குள்ளாவது நமது முதன்மை கழிவுநீக்க உறுப்புகளான சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் தான்.

ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பே உடலுக்கு போதுமானது. ஆனால் நாம் அனைத்து உணவுகளிலும் உப்பை அதிகம் சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால், உப்பை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.

தொடர்ச்சியாக இரவில் தூங்காமல் இருப்பதால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து உருவாகிறது.

காபி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் சிறுநீரகத்தின் பணிச்சுமை அதிகரிக்கிறது. இப்பழக்கம் தொடர்கையில், காலப்போக்கில் இது சிறுநீரகத்தை சேதப்படுத்த தொடங்கும்.

சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேலாக அருந்துவோரின் சிறுநீரில் புரதம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குறைவாக அருந்துவதே சரி.

துரித உணவுகளில் உப்பும் மசாலாவும் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவை சிறுநீரகத்தின் பணிச்சுமையை அதிகரித்துடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...