முத்தான சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பயறு தோசை
முதல் நாள் காலையில் பாசிப்பயறு, கருப்பு சுண்டல் மற்றும் வெள்ளை சுண்டலை தலா அரை கப் வீதம் நன்றாக ஓரிரு முறைக் கழுவி, தண்ணீரில் 10 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
பின், தண்ணீரை வடித்துவிட்டு, ஊறிய பயறுகளை (ஸ்டெய்னர்) வடிகட்டி போன்ற பாத்திரத்தில் வைத்து, மேலே காட்டன் துணியால் மூடி நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
அல்லது கிராமத்து ஸ்டைலில் காட்டன் துணியில் பயறை இறுக்கமாக கட்டி வைக்கலாம். மறுநாள் காலையில் பார்த்தால் பாசிப்பயறு மட்டுமே சிறிதளவு முளைவிட்டிருக்கும்.
அவற்றை சுத்தமான தண்ணீரில் மீண்டும் கழுவி, துணியால் மூடி காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். மாலையிலும் இதேப்போன்று செய்யவும். மூன்று நாட்களில் பயறுகள் நன்றாக முளை விட்டிருக்கும்.
மிக்சி ஜாரில் முளைக்கட்டிய பயறுகள், சீரகம்- 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை 2 கொத்து, கொரகொரப்பாக இடித்த குருமிளகு 1/4 டீஸ்பூன்...
இஞ்சி - 2 இன்ச், சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பவுலுக்கு மாற்றி, அதனுடன் ராகி மாவை சேர்த்து கலக்கவும். மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
கடாயில் மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து இருப்பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு தோசை ரெடி.
வழக்கமான தோசையை விட கலராக இருப்பதால் குட்டீஸ்கள் விரும்பச் சாப்பிடுவர்; முளைகட்டிய பயறுகளால் ஆரோக்கியமும் மேம்படும்.