கண்களைப் பாதுகாக்கும் சன்கிளாஸ்!
சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சன்கிளாஸ்கள் கண்களைப் பாதுகாக்கின்றன.
சன்கிளாஸ் அணிவது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஆரம்பகால கண்புரை, உலர் கண்கள், விழித்திரை பாதிப்பு, கண்களைச் சுற்றியுள்ள தோல் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
லென்ஸ் வழியாக செல்லும் சில ஒளியை கண்களுக்கு செல்லாமல் சன்கிளாஸ்கள் தடுக்கிறது.
இது வலுவான வெளிச்சம் உள்ளே செல்வதைத் தடுப்பதால், தலைவலி, கண்களில் நீர் வடிதல் போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
இது மேகமூட்டமான காலநிலையில் கூட புற ஊதா கதிர்கள் கண்ணுக்குள் செல்வதைத் தடுக்கிறது, விழித்திரை சேதம், கண்புரை மற்றும் கிளைக்கோமாவை தடுக்கிறது.
மாசு மற்றும் தூசிகள் நேரடியாகக் கண்களில் படுவதைத் தடுப்பதுடன், கண்களின் மேற்பரப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.