வெட்னஸ்டே சீரிஸில் வருவது போல் நிஜத்திலும் வாழும் அசாதாரண மனிதர்கள்!

எப்பொழுதாவது ஒரு ஒலியைக் கேட்கும் பொழுது நிறத்தைப் பார்த்துள்ளீர்களா?

இத்தகைய வினோதமான கேள்விகளுக்கு உலகின் சில மனிதர்களால் பதிலளிக்க முடியும். இந்நிலையை ஆராய்ச்சியாளர்கள் 'சினெஸ்தீசியா' (Synesthesia) என்று குறிப்பிடுகின்றனர்.

சினெஸ்தீசியா உள்ள மனிதர்களால் ஒரு தூண்டுதலின் பொழுது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உணர்ச்சிகளை உணர முடியும்.

மூளையில் ஏற்படும் இத்தகைய பல் திறனை பற்றி ஆராயும், பல்வேறு துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலக்கூற்றினை நெருங்கிவிட்டதாக கூறுகின்றனர்.

உலகில் 2000 பேரில் ஒருவர் சினெஸ்தடிக் ஆக உள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் வளர வளர மூளை பிரித்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளும். ஆனால் உலகின் 5% மனிதர்களுக்கு மட்டும் இந்த திறன் மாறாமல் இருக்கும்.

சினெஸ்தீசியா உள்ள மனிதர்களுக்கு படைப்புத்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நிகோலா டெஸ்லா, பில்லி ஐல்லிஷ், விளாடிமிர் நபோகோவ் போன்ற பிரபலங்களுக்கும் சினெஸ்தீசியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...