இதயத்தை காதல் சின்னமாக அங்கீகரித்தது எப்போது?

காதல் சின்னமாக இதயம் தேர்வு செய்யப்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ரோமானியர்கள் ஆட்சி காலத்தில் இத்தாலியில் சில்ஃபியம் என்கிற செடி இலைகள் இதயத்தின் வடிவில் இருந்ததாகவும் இதுவே பின்னாட்களில் காதல் சின்னமாக மாறியது எனவும் கூறப்படுகிறது.

காதல் ஜோடிகளுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்து புகழ்பெற்ற பாதிரியார் வேலன்டைன், சிவப்பு இதயத்தை காதலின் சின்னமாக அறிவித்தார் எனவும் கூறப்படுகிறது.

இவரது நினைவு நாளான பிப்.,14 உலக காதலர் தினமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

காதல் உணர்வை இதயம் தூண்டுவதால், உலகின் சில இடங்களில் இதயத்தை காதல் சின்னம் போல மாற்றிக்கொண்டனர்.

ஆனால் காதல் உணர்வைத் தூண்டுவது இதயம் அல்ல. மூளையின் எமிக்டாடா (amygdala) என்னும் பகுதி.

காதலரின் இதயத் துடிப்பை உணர்கிறேன், இரண்டு இதயங்கள் காதல் மூலம் இணைகின்றன என கதைகளில் கதாசிரியர்கள் பலர் எழுதி எழுதி காதலுக்கு இதயத்தை சின்னமாக மாற்றிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...