வெள்ளி முதல் வியாழன் வரை (3.2.2023 - 9.2.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்...!

மேஷம்... செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். சிவனை எண்ணி வழிபட நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம்... செயல்களில் நெருக்கடி ஏற்பட்டாலும் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள். பண வரவில் இருந்த தடை விலகும். சண்முகரை வழிபட வாழ்க்கையில் வளம் உண்டாகும்.

மிதுனம்... சங்கடங்கள் விலகி நன்மை காணும் வாரம் இது. நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும். நண்பர்களின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். மீனாட்சியம்மன் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.

கடகம்... எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் தீரும்.

சிம்மம்... நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி நடந்தேறும். உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். எதிர்பாராத செலவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சூரிய பகவானை வழிபடுவது நல்லது.

கன்னி... வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொருளாதார நிலை உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். துர்கை வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

துலாம்... பொருளார நிலை சீராகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்... சிலருக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அமையும். முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் நினைத்ததை அடைவீர்கள். வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதரை எண்ணி வழிபடுங்கள்.

தனுசு... செயல்களில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. நேர்மையான வழியில் வரவுகள் உண்டாகும். அனுமனை வழிபட நன்மை உண்டாகும்.

மகரம்... நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். செயல்களில் கவனம் தேவை. சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்... தொழில், உத்தியோகம் சிறப்படையும். முயற்சிகள் லாபமாகும். குடும்பத்தினர் உதவியுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நவக்கிரக வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மீனம்... உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...