”கூகுளின் ஆதிக்கம் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம்”

சாட்ஜிபிடி போன்ற ஏ.ஐ.,செயலிகளுடன் போட்டியிட முடியாமல், கூகுள் தேடுபொறியின் ஆதிக்கம் இன்னமும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம்.

இதை ஜிமெயிலை கண்டறிந்தவரான பால் புக்ஹெய்ட் கணித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனம், கடந்தாண்டு நவம்பரில் சாட்ஜிபிடி என்ற செயலியை வெளியிட்டது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலி, தற்போது உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.

சாட்ஜிபிடி என்ற செயலி அறிமுகமான ஒரே வாரத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை ஈர்த்துள்ளது.

விரைவாக கேள்விக்கு பதில் கண்டறிதல் கட்டுரை மற்றும் கவிதை எழுதுதல் மார்க்கெட்டிங் இலக்குகள் எம்பிக்கள் உரை போன்றவற்றை தயாரிப்பதில் துரிதமாக செயல்படுகிறது.

கடினமான கணக்கு சூத்திரங்களை கையாள்வதில் மட்டும் சற்றே தடுமாற்றம் கொள்கிறது.

மனிதர்களின் வேலையை புதிய தொழில்நுட்பம் பறிக்க கூடுமென அச்சம் ஒருபுறம் நீடிக்கிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...