தெருக்களைப் புகைப்படம் எடுத்து கூகுளில் பணம் ஈட்டலாம் தெரியுமா?

நீங்கள் 360 டிகிரி கேமரா வைத்துள்ள புகைப்பட நிபுணர் என்றால் கூகுளின் உதவியுடன் அதிக தொகை ஈட்ட முடியும் தெரியுமா?

'கூகுள் ஸ்ட்ரீட் வியூ' தொழில் தற்போது கூகுள் நிறுவனத்தின் லாபகரமான தொழிலாக வளர்ந்து வருகிறது.

இந்தப் புகைப்படங்கள் எடுக்க, உள்ளூர் புகைப்பட நிபுணர்களே பயன்படுத்தப்படுகின்றனர்.

கூகுளின் ஸ்ட்ரீட் புகைப்படக் கலைஞர் ஆக, 360 டிகிரி கேமரா கொண்டு உங்கள் தெரு முழுவதும் 1மீ இடைவெளியில் அடுத்தடுத்து 50 புகைப்படங்கள் எடுக்கவேண்டும்.

இவற்றை கூகுள் தளத்தில் நீங்கள் பதிவேற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

உங்கள் கேமரா கோணம், கலைநயம் உள்ளிட்டவை அவர்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கூகுளின் ட்ரஸ்டட் புகைப்பட நிபுணராக அங்கீகரிக்கப்படுவீர்கள்.

நகரின் முக்கியப் பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூகுள் மேப் செயலியில் தங்கள் கடையின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற ஆவலாக இருப்பர்.

இந்த சேவைக்காக டிரஸ்டட் புகைப்பட நிபுணருக்கு கடை உரிமையாளர் ஒரு தொகையை கட்டணமாக அளிக்கவேண்டும்.

இதனால் கூகுள், புகைப்பட நிபுணர், கடை உரிமையாளர் என மூவருக்குமே லாபம் கிடைக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...