பிரபலங்கள் அருந்தும் பிளாக் வாட்டர் - அதில் என்ன ஸ்பெஷல்?
விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக், காஜல் அகர்வால் மற்றும் ஸ்ருதிஹாசன் உட்பட பிரபலங்கள் பலரும், தங்களின் கைகளில் 'பிளாக் வாட்டர்' உடன் நடமாடுவதை பார்த்திருப்போம்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் பிரபலங்கள் பலரும் இந்த பிளாக் வாட்டர் எனப்படும் கருப்புத்தண்ணீரை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
பல்விக் ஆசிட் மற்றும் ஹூமிக் ஆசிட்டின் சத்துக்கள் அடங்கியதைத் தான் கருப்புக் குடிநீர் என மார்க்கெட்டிங் செய்கின்றனர்.
ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், கருப்புக் குடிநீரில் உள்ள சத்துக்களால் நோய் எதிர்க்கும் திறனை உடல் மேம்படுத்திக் கொள்வதாகவும், வளர்சிதை மாற்றத்துக்கான ஆன்டிஆக்சிடென்ட் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக நாம் அருந்தும் தண்ணீரில் குளோரின் மற்றும் சுண்ணாம்புடன், 6.5 முதல் 7.5 வரை pH எனப்படும் கார அமிலத் தன்மை இருக்கும். ஆனால் கருப்பு தண்ணீரில் அதைவிட சற்று கூடுதலாக காரத்தன்மை உள்ளது.
சாதாரணமாக தண்ணீரைச் சுத்திகரித்து, அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்களை செயற்கையாக சேர்த்து மினரல் வாட்டர் கேன்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதுபோன்று 70க்கும் மேற்பட்டதாதுப்புக்கள் சேர்க்கப்பட்டு இந்த கருப்புத் தண்ணீர் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் ஒரு லிட்டர் 200 ரூபாயாக உள்ள இந்த கருப்புத் தண்ணீரின் நன்மைகள் குறித்து இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.