மத்திய பட்ஜெட் 2023 - 24... பார்லி.,யில் இன்று (பிப்.,01) காலை நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
விவசாயிகளுக்கான கடன் தொகை 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு. கிராமப்புறங்களில் வேளாண் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் துவங்க ஊக்குவிப்பு. மீன்வளத்துறையை மேம்படுத்த, 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள்; கடலோர பகுதிகளை இணைக்க படகு போக்குவரத்து திட்டம் உருவாக்கப்படும்.
157 புதிய நர்சிங் கல்லூரிகள் துவங்கப்படும்.
ரயில்வே துறைக்கு, 2.04 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில், அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும்.
வருமான வரிக்கான உச்சவரம்பு, 2.5 லட்சத்தில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்வு
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. ஒரு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது.
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு என தனி டிஜி லாக்கர் முறை உருவாக்கப்படும்.
ஜன்தன் வங்கி கணக்குகள் 47.8 கோடி துவங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு.