அசத்தலான மணத்தக்காளி வத்தக்குழம்பு... ஈஸியாக செய்யலாம் வாங்க !

கடலைப்பருப்பு 1 டே.ஸ்பூன், உ.பருப்பு 1/2 டே.ஸ்பூன், தனியா, சீரகம் மற்றும் வெந்தயம் தலா 1/4 டீஸ்பூன், 6 காய்ந்த மிளகாய், சிறிது கறிவேப்பிலையை கடாயில் எண்ணெய் விடாமல் நன்றாக வறுக்கவும்.

சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் நைசாக அரைக்கவும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் 4 டே.ஸ்பூன் சுண்டைக்காய் அல்லது மணத்தக்காளி வத்தலை போட்டு பொறித்து எடுக்கவும்.

கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் விட்டு கடுகு 1/4 டீஸ்பூன், சீரகம் 1/2 டீஸ்பூன், வெந்தயம் 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, 6 காய்ந்த மிளகாய் மற்றும் 20 பல் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து சிறிய வெங்காயம் 150 கிராம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை 2 நிமிடங்கள் மட்டுமே வதக்க வேண்டும். பின்னர் 2 நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறவும்.

தொடர்ந்து, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் 1/2 டே.ஸ்பூன், தனியா தூள் 1 டே.ஸ்பூன் சேர்த்து வதக்கியவுடன், 2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தண்ணீர் வற்றியவுடன் கரைத்து வைத்த (எலுமிச்சை அளவு ) புளிக்கரைசலை சேர்த்து மீண்டும் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பின், 2 பத்தை (பீஸ்) தேங்காயை நைசாக அதன் பாலை மட்டும் சேர்க்கவும்.

தே.பால் சேர்த்தவுடன் 2 நிமிடங்கள் குழம்பு கொதித்தாலே போதுமானது. பின், சிறிது நல்லெண்ணெய், பொறித்த மணத்தக்காளி வத்தல், 1/2 டே.ஸ்பூன் அரைத்த மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, 2 சிட்டிகை நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறினால் சுவையான, அசத்தலான வத்தக்குழம்பு ரெடி.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...