இரவில் இப்படித்தான் தூங்கணும்!
இரவில் குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இவ்வாறு தூங்குவதால் முதுகெலும்புகள், எலும்புகள் மற்றும் நுரையீரல்கள் கடுமையாக அழுத்தப்படுகின்றன.
இதனால் அஜீரணக் கோளாறு, அமிலத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. கழுத்துப் பகுதியில் தசை சமநிலையற்று காணப்படும்.
இது நாள்பட்ட கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, இடது பக்கமாக படுத்து தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.
இதுதவிர, கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குவது இடுப்பு மற்றும் முதுகெலும்பை சீரமைப்பதாக டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மெல்லிய மெத்தை, தலையணையை பயன்படுத்தினால் தோள்பட்டை அல்லது கழுத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
காலையில் நீங்கள் எழும்போது முதுகுப் பகுதி படுக்கையில் படுமாறு ஒருமுறை உருண்டு, பின்னர் 10 நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு எழுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.