திகட்டாத பாரம்பரியம் மிக்க அழகிய இந்திய மலைப்பாதை ரயில்கள்...!

முன்பு அரசியல் பின்னணிக்காக மலைகளை குடைந்து ஆங்கிலேயர்கள் அமைத்த மலைப்பாதை ரயில் வழித்தடங்கள் இன்று பயணிப்பவர்களுக்கு இயற்கை அழகை வாரி வழங்குகிறது.

டார்ஜீலிங் - ஹிமாலயன் ரயில்வே போக்குவரத்து 1881ல் துவங்கிய நிலையில், இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்படும் இந்த ரயில், கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீ., உயரத்தில் கம்பீரமாக பயணிக்கிறது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது. செல்லும் வழியெங்கும் அழகிய பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், நீரோடைகள் என இயற்கையின் விருந்தை ரசிக்கலாம்.

எங்கு செல்கிறோம் என்பதை விட எப்படிச் செல்கிறோம்? என்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது. அதன்படி மூடுபனி நிறைந்த இமயமலை வழியாகச் செல்லும் ரயில் பயணமே இந்த காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே.

அழகிய சிம்லாவை அடைய சிக்கனமான வழியாக மட்டுமின்றி இமயமலை மலைகள் வழியாக, 800 பாலங்கள், 103 சுரங்கங்கள் என மூச்சடைக்கக்கூடிய பயணமாகவும் உள்ளது கல்கா சிம்லா ரயில்வே பயணம்.

மகாராஷ்டிராவின் மாத்தேரான் மலை ரயில் பாதை, பயணத்தை நம்ப முடியாத ஒரு அனுபவமாக மாற்றுகிறது. இந்தப் பாதையில் ஒரே ஒரு சுரங்க வழிதான் உள்ளது. இதனால், 'முத்த சுரங்கம்' (one kiss) என அழைக்கப்படுகிறது.Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...