உடற்பயிற்சிக்கு முன்னதாக நன்றாகச் சாப்பிட விரும்புவர்களுக்கு ஓட்ஸ் சரியான உணவாக இருக்கும். ஓட்ஸ் மற்றும் சில மிக்ஸ்-பெர்ரிகளை இரவு ஊறவைத்து, காலையில் சிறிது தயிர் சேர்த்துச் சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளதால் பாதாம் பட்டர் அல்லது பீனட் பட்டர் சேர்த்துச் சாப்பிட்டால் போதுமான சக்தியை பெறலாம்.
உடற்பயிற்சிக்கு முன்னதாக நன்றாகச் சாப்பிட விரும்புவார்களுக்கு ஓட்ஸ் சரியான உணவாக இருக்கும். ஓட்ஸ் மற்றும் சில மிக்ஸ்-பெர்ரிகளை இரவு ஊறவைத்து, காலையில் சிறிது தயிர் சேர்த்துச் சாப்பிடலாம்.
ஸ்மூத்தீ ஒரு லேசான சிற்றுண்டியாக இருக்கலாம். அது உங்களை மந்தமாக இருப்பது போல் உணர விடாது; அதே நேரத்தில் கடினமான உடற்பயிற்சிக்கான ஆற்றலையும் தருகிறது.
தயிரில் தசை முறிவைத் தடுக்கும் புரதம் உள்ளதால், இதனுடன் பெர்ரி மற்றும் கிரானோலா ஆகியவை சேர்த்துச் சாப்பிடும் போது உடற்பயிற்சிக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்கும்.
பாலாடைக்கட்டியுடன் சில ஆப்ரிகாட் பழங்களைச் சேர்ப்பதால், ஒவ்வொரு வொர்க்அவுட்டிலும் தசை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிற்றுண்டியாக இது அமைகிறது.