2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாயன் நகரம் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!


அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் மழைக்காடுகளால் மறைக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மாயன் நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோ எல்லைக்கு அருகில் 650 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இந்த பகுதி, மிராடோர்-கலக்முல் கார்ஸ்ட் பேசின் என அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் 110 மைல் நீளமுள்ள தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட சுமார் 1000 குடியிருப்புகள் இங்கே இருந்திருக்கலாம் என மதிப்பிடுகின்றனர்.

மக்கள் பயணிக்கக்கூடிய தரைப்பாதைகள் இருப்பதால் மாயன் நாகரம் அருகே பல நகரங்கள் இருந்திருக்கலாம், அதை இணைக்க இந்த சாலை முறைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

சில குடியிருப்புகளில் பெரிய தளங்கள் மற்றும் பிரமிடுகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நாகரிகத்தில் மக்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்கு கால்வாய்களையும், வறண்ட காலங்களில் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களையும் கட்டினார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...