சானிட்டரி நாப்கின்களில் ஆபத்தான ரசாயனப் பொருட்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் விற்பனையாகும் சானிட்டரி நாப்கின்களில், இதய பாதிப்பு, நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுத்த கூடிய அபாயகரமான ரசாயனப் பொருட்கள் அதிகளவில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


இந்திய சந்தையில் விற்பனையாகும் முன்னணி சானிட்டரி நாப்கின்கள் தரம் குறித்து டில்லியை சேர்ந்த, டாக்சிஸ் லிங் என்ற என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு நடத்தியது.

சந்தையில் கிடைக்கும் 4 ஆர்கானிக் சானிட்டரி உட்பட மொத்தம் 10 நாப்கின்களை மாதிரியாக எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், பென்சென்டிகார்பாக்சிலிக் அமில எஸ்டர்கள் எனப்படும் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் ஆர்கானிக் சேர்மங்கள் இருந்தன.

நீரிழிவு, புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், இதயம் மற்றும் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பாதிப்புகளுக்கும் பித்தலேட்டுகளும் தொடர்புள்ளது.

முற்றிலும் இயற்கையானதாக அறியப்படும் ஆர்கானிக் சானிட்டரி நாப்கின்களில் கூட அதிகளவு பித்தலேட்டுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

எனவே, நாப்கின் தயாரிப்புகளில் பித்தலேட்டுகளின் இருப்பு மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து, ஒரு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

நாப்கின் பொருட்களில் பயன்படுத்தபடும் ரசாயனங்களுக்கான தரநிலைகளை உறுதிசெய்ய அரசு, தர நிர்ணய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நிறுவனங்கள், தங்களது தயாரிப்பு குறித்த பொருத்தமான தகவல்களையும், போதுமான எச்சரிக்கைகளையும் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.


தயாரிப்புகளில் ரசாயனங்களின் பயன்பாட்டை மாற்றியமைக்கவோ, குறைக்கவோ வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...