பார்வோ வைரஸிடமிருந்து உங்கள் செல்ல நாய்க்குட்டியைக் காக்கணுமா?

கெனைன் பார்வோ வைரஸ் சுருக்கமாக சிபிவி. நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க் குட்டிகளைத் தாக்கும் ஓர் உயிர்கொல்லி நோய்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள ஒரு வயதுக்குட்பட்ட நாய்க்குட்டிகளை இந்த நோய் அதிகம் தாக்கும். 1967ம் ஆண்டு பார்வோ வைரஸ் முதன்முறையாக நாய்களிடம் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் சுற்றுச்சூழலில் இருந்து அவ்வளவு சீக்கிரம் நீங்காது. பாதிக்கப்பட்ட நாய்க்குட்டி மூலமாக மற்ற நாய்க்குட்டிகளுக்கு சீக்கிரம் பரவுவதால், பார்வோ தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த வைரஸ் நாய்களின் மலத்தில் இருந்து பிற நாய்க்குப் பரவக்கூடும். இது காற்றில் பரவாது என்றாலும், வாக்கிங் செல்லும்போது வைரஸ் நாயின் நாக்கு எச்சில் மூலம் உடலில் பரவக்கூடும்.

மனிதர்களுக்கு நாயிடம் இருந்து பார்வோ வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்றபோது பாதிக்கப்பட்ட நாய்க்குட்டியிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.


பார்வோ வைரஸ் தாக்கப்படும் நாய்க்குட்டியின் குடல், எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படுவதால், வாந்தி, பேதி ஏற்படும். ஆரம்ப அறிகுறிகள் தென்படும்போதே சிகிச்சை எடுத்தால் காப்பாற்ற முடியும்.

தாமதமாகச் சென்றால் காப்பாற்றுவது கடினம். பார்வோ வைரஸ் நாய்களிடம் இருந்து பூனைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

ஜெர்மன் ஷெபர்டு, டால்மேஷன், ராட்வெய்லர், கோல்டன் ரெட்ரீவர் உள்ளிட்ட வெளிநாட்டு ப்ரீட் நாய்களை ஆறு மாதங்கள் வரை வெளியே வாக்கிங் அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.


ஒரு வயதடைந்த நாய்களுக்கு பார்வோ வைரஸை எதிர்க்க, உடலில் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட வளர்ந்த நாய்களையும் தாக்கும் அபாயம் உள்ளது.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...