வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாம்...!

இயற்கை உரமாக... பொட்டாசியம் நிறைந்துள்ளதால், வாழைப்பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி மண்ணுக்குள் போடுவதால், தாவரங்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

பற்கள் வெண்மை நிறமாக... வாழைப்பழ தோலில் கனிமங்கள் நிறைந்துள்ளதால், தொடர்ந்து பயன்படுத்தி வர பற்கள் வெண்மை நிறமாக மாறும்.

வெள்ளி பொருட்கள் பளபளக்க... வாழைப்பழ தோலை மிக்ஸியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து, வெள்ளி பொருட்கள் மீது தடவுங்கள். சில நிமிடங்கள் கழித்து, கழுவினால் அவை பளபளக்கும்.

ஷூ பிரகாசிக்க... வாழைப்பழ தோலின் உட்பகுதியை பயன்படுத்தி தோல் பொருட்களால் ஆன ஷூவை துடைத்தால், புதியது போல பிரகாசிக்கும்.

சருமத்திற்கு மாய்ஸ்ரைசராக... வறண்ட சருமத்தில் வாழைப்பழ தோலை தேய்த்து வர நாளடைவில், சருமம் மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் மாறக்கூடும்.

பூச்சி விரட்டியாக... வாழைப்பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி, வீட்டு தோட்டத்தில் போடவும். இது அஸ்வினி பூச்சி வளர்ச்சியை தடுக்க உதவும்.

முகப்பருக்களை நீக்க.. வாழைப்பழ தோலில் உள்ள நோயெதிர்ப்பு திறன், அழற்சி எதிர்ப்பு தன்மை, முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...