ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 7 உணவுகள்..!
ஆரஞ்சு பழம், பெர்ரி மற்றும் திராட்சை உள்ளிட்ட வைட்டமின் - சி சத்துள்ள பழங்களை எடுத்து கொள்வதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
மாதுளையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் தொடர்ந்து எடுத்துக் கொண்டால்,ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. பேரீச்சம்பழம் எடுத்து கொண்டால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, போலிக்
அமிலம் உள்ளிட்டவை உள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
நிலக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால், இவை ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
தர்பூசணி பழத்தில் வைட்டமின் - சி, இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
ஹீமோகுளோபினை அதிகரிக்க முயற்சிப்போர், தர்பூசணி பழத்தை எடுத்து கொள்ளலாம்.
பூசணி விதையில், இரும்புச்சத்துடன், கால்சியம், மேக்னீசியம், மாங்கனீசு உள்ளன. உணவில் பூசணி விதைகளை சேர்த்து வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும்.